Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

ஜூன் 14 வரை இந்த ராசிக்காரர்கள் சூரிய பகவானின் அருள்மழையில் நனைய போகிறார்கள்...

A
Admin User
Journalist
June 04, 2022 1 min read 24 views
ஜூன் 14 வரை இந்த ராசிக்காரர்கள் சூரிய பகவானின் அருள்மழையில் நனைய போகிறார்கள்...

ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவானுக்கு என்று தனி இடம் உண்டு. சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் அனைவருக்கும் சுப பலன்கைள் வழங்குபவர். அவர் ஓரிடத்தில் இருக்கும் போது ​​அந்த நபருக்கு அதிர்ஷ்டத்தின் பரிபூரண அருளும் கிடைக்கும். இந்த நேரத்தில் சூரிய பகவான் ரிஷப ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்வார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சூரியன் மேஷ ராசியில் தங்கியிருப்பது சில ராசிக்காரர்களுக்குச் சிறப்பு வாய்ந்ததாக இருக்க போகிறது. ஜூன் 14 வரை சூரியன் ரிஷப ராசியில் இருப்பார். அதன் பிறகு சூரியன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். எனவே, ஜூன் 14 வரையிலான காலக்கட்டம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலமாக இருக்க போகிறது. உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கக்கூடும். மேலும், வேலை தொடர்பான திடீர் பயணங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உங்கள் சிறப்பான செயல்திறனால் விரையில் ஊதிய உயர்வும் பெற்றிடலாம். நீங்கள் செய்யும் எந்த பணியும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வேலையில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வேலை மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காலமாக இருக்க போகிறது. ஆரோக்கியத்தில் இருந்துவந்த கவலை நீங்கிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால், அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் கௌரவம் கூடும். புது வாகனம் வாங்க நீண்ட காலமாக திட்டமிட்டால் இந்த நேரத்தில் வாங்கிட முடியும். உங்களின் பொருளாதார நிலையும் மேம்படும். இந்த காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் உங்களுக்கு லாபம் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். இதனால் பணம் தொடர்பான உங்களின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள், இதன் காரணமாக உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையோருக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏதாவது முதலீடு செய்தால் அதனால் நிச்சயம் நன்மை பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டால் அதனை இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கலாம். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை எந்த தடையுமின்றி அடையலாம். மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல நிதி லாபமும் இருக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி பக்கம் வலுவாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது என்றும் சொல்லலாம்.

HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)
Recommended for You
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க