Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

முடி ஈரமா இருக்கும் போது இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க...

A
Admin User
Journalist
December 30, 2021 1 min read 25 views
முடி ஈரமா இருக்கும் போது இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க...

பெண்ணிற்கு அழகு கூந்தல் என்று முன்பு சொல்லி வந்தனர். ஆனால், இப்போது ஆண்கள் கூட நீளமான முடியை வைத்து கொள்வதை விரும்புகின்றனர். நமது உடலுக்கும், சரும பராமரிப்பிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவு முக்கியத்துவத்தை நாம் தலை முடிக்கும் கொடுத்தாக வேண்டும். ஏனென்றால், தற்போதைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு வழுக்கை ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. எனவே, சிறு வயது முதலே நம் கூந்தலுக்கு என்று தனி கவனிப்பு தேவைப்படுகிறது.

முடி உதிர்வதற்கு, வழுக்கை ஏற்படுவதற்கு உடல்ரீதியான பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நமது அலட்சியத்தால் இது நேர்ந்ததாக இருக்கக்கூடாது அல்லவா? இப்போது அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளினாலும் கூட தலைமுடி பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக முடி ஈரமாக இருக்கும் போது நாம் தெரியாமல் செய்யக்கூடிய விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஈரமான தலைமுடி பலவீனமான நிலையில் இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது, முடி ஈரமாக இருக்கும் போது செய்யக்கூடாத தவறுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

ஈரமான முடியை சீவுவது

பெரும்பாலானோர் தலை முடி ஈரமாக இருக்கும் போதே சீவுவார்கள். இப்படி ஈரமான முடியில் சீப்பை பயன்படுத்தும் போது, முடி அதிகமாக சேதமடைந்து கொட்ட தொடங்கும். எனவே உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால், முடி ஈரமாக இருக்கும் போது சீவாமல், முற்றிலும் உலரும் வரை காத்திருந்து பின் சீவுங்கள்.

இறுக்கமாக கட்டுவது

தலைக்கு குளித்த பிறகு பெரும்பாலான பெண்கள் தலைமுடியை இறுக்கமாக கட்டுவார்கள். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த மாதிரியான தவறுகளை அதிகம் செய்வார்கள். ஈரமான முடியை இறுக்கமாக கட்டும் போது, தலைமுடி அதிகம் சேதமடையக்கூடும். எனவே, இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள். இல்லாவிட்டால் கொத்து கொத்தாக முடி கொட்டும்.

தலைமுடியை தேய்ப்பது

தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்துவதற்கு நாம் பெரும்பாலும் துண்டால் துடைப்போம். ஆனால் இனிமேல் அப்படி முடியை உலர்த்தாதீர்கள். ஏனெனில் இச்செயலால் தலைமுடி அதிகம் உடையும் மற்றும் அதிக சிக்கலுமாகும். உங்கள் முடியை உலர்த்த நினைத்தால், மென்மையான துணியால் தலைமுடியை ஒத்தி எடுங்கள்.

ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது

தற்போது பலரது வீடுகளில் முடியை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையர் பயன்படுத்துகின்றனர். ஹேர் ட்ரையர் ஈரமான முடியை உலர்த்துவதற்கு தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஹேர் ட்ரையரில் இருந்து வெளிவரக்கூடிய சூடான காற்று பலவீனமான நிலையில் இருக்கும் ஈர முடியை அதிகமாக சேதப்படுத்தும். எனவே, முடிந்தவரை இயற்கையாக முடியை உலர்த்துங்கள். அவசர காலங்களில் மட்டும் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துங்கள்.

ஈரமான முடியுடன் தூங்குவது

பலர் இரவில் தலைக்கு குளிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். அப்படி தலைக்கு குளிப்பவர்கள் முடியை முற்றிலும் உலர்த்தாமல் ஈரமான முடியுடன் அப்படியே படுத்து உறங்குவர். இப்படி ஈரமான முடியுடன் தூங்கினால் உடலுக்கும் நல்லதல்ல, கூந்தலுக்கும் நல்லதல்ல. ஏனென்றால், தலையணையில் முடி அதிகமாக உரசி, அதனால் அதிகமாக தலைமுடி சேதமடையும்.

https://www.youtube.com/watch?v=KVbvPhuful4
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
Recommended for You
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க