ஜூன் மாதத்தில், இரண்டு முக்கியமான கிரகங்கள் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு ராசிகளில் பின் நோக்கி சென்று வக்ர பெயர்ச்சி ஆகின்றன. கிரகங்களின் அதிபதியும், செல்வச் செழிப்புக்கும் அதிபதியுமான புதன் வக்ர பெயர்ச்சி ஆகி, நற்பலன்களை அளிப்பவராக திகழ்கிறார். நீதியின் கடவுளான சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சியாகி உள்ளனர். இந்த இரண்டு ராசிகளின் தலைகீழ் இயக்கம் வெவ்வேறு ராசிக்காரர்களைப் பாதிக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலனையும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலனையும் தரும். ஜூலை 2ம் தேதிக்குள் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு இதன் மூலம் சிறப்பான பலன் கிடைக்க போகிறது. அந்த வகையில், புதன் மற்றும் சனியின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்
சனி மற்றும் புதன் பகவானின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக அமைய போகிறது. வணிகர்களுக்கு, தற்போது செய்து வரும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். நீங்கள் எடுக்கும் எந்த வேலையிலும் வெற்றி உங்கள் வசம் இருக்கும். அதுதவிர, புதிதாக முதலீடு செய்தால் அதிலும் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு, தங்களது திறமையை வெளிப்படுத்த சிறப்பான வாய்ப்பு தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொண்டால் நீங்கள் பெரிய அளவில் முன்னேறலாம்.

ரிஷபம்
உத்தியோகஸ்தர்கள் இந்த காலக்கட்டத்தில் தங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. வணிகர்கள் ஏதேனும் முன்னேற்றத்தைப் பற்றி திட்டமிட்டால், அனுபவம் வாய்ந்த நபரிடம் இருந்து வழிகாட்டுதலைப் பெற்றிடலாம். எப்படிப்பட்ட சூழலிலும், உங்கள் பேச்சிலும் நடத்தையிலும் கட்டுப்பாடு தேவை. திடீர் பயணங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக அமையும். மாணவர்கள் கல்வியில் சாதனை புரியலாம்.

மிதுனம்
புதன் மற்றும் சனியின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவையே ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். எந்த புதிய முதலீட்டின் வாயிலாக நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வாகனம், புதிய வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். கல்வித் துறையிலும் வெற்றி கிட்டும். பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் உங்கள் நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எத்தகைய பாதகமான சூழலையும் சுலபமாக எதிர்கொள்வீர்கள்.