Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

பற்களை வீட்டுல இருக்குற இந்த பொருட்களை வச்சே பளிச்சுன்னு மாத்திடலாம்!!!

A
Admin User
Journalist
December 13, 2021 1 min read 25 views
பற்களை வீட்டுல இருக்குற இந்த பொருட்களை வச்சே பளிச்சுன்னு மாத்திடலாம்!!!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர். அது என்னவோ உண்மை தான். நம் முகத்தை எப்போதும் பளிச்சென்று வைத்துக் கொள்வதையே அனைவரும் விரும்புவர். ஆனால், சருமத்திற்கு காட்டும் அக்கறையில் சிறிது கூட பற்களுக்கு காட்டப்படுவதில்லை என்பது தான் உண்மை. நம் முகம் பளிச்சென்று இருந்து, பற்கள் மட்டும் மஞசள் கறை படிந்து, பேசும் போது துர்நாற்றம் வீசினால் அது நம் அழகை கெடுக்க தான் செய்யும். அதற்காக மருத்துவமனை சென்று பற்களை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பற்களை பராமரிப்பதில் ஆங்கில மருந்துகளை காட்டிலும், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில மூலிகை, மசாலா பொருட்களே சிறந்தது. அவை, பற்களை பளிச்சென்று மட்டுமின்றி, வலிமையாகவும் மாற்றக்கூடியவை. அப்படி, பற்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அற்புதமான பொருட்கடளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

துளசி
துளசி நம் ஊரில் மிக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை தான். இந்த துளசி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தனி சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம். அதுமட்டுமின்றி, இது வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சிறந்தது. துளசியில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் வாயில் உருவாகக்கூடிய பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். இதனால், வாய் துர்நாற்றம் இல்லாமல், சொத்தை பல் பிரச்சனை ஏற்படாமல் காக்க முடியும்.

ரோஸ்மேரி
இது உணவில் சுவைக்காக சேர்க்கப்பட கூடிய மூலிகை என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், இது கால்சியம் நிறைந்த மூலிகை என்பது பலருக்கு தெரியாது. இந்த மூலிகையை உட்கொள்வதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திட முடியும்.

மஞ்சள்
தினசரி சமையலில் மஞ்சள் சேர்ப்பது நமது வழக்கம். அந்த மஞ்சள் ஒரு ஆன்டி-பாக்டீரியல் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், பல் மற்றும் வாய் ஆரோக்கியம் என்று வரும் போது, இது பெரிதும் உதவிடும் என்பது பலருக்கு தெரியாது. சில ஆய்வுகளின்படி, மஞ்சளில் வாயை சுத்தப்படுத்தக்கூடிய பண்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப நிலையை மாற்றியமைக்கும் சக்தியும் மஞ்சளுக்கு உண்டாம்.

எள்
எள் பல் ஆரோக்கியத்தை இரண்டு வழிகளில் பராமரிக்க உதவுகின்றன. ஒன்று, நீங்கள் மெல்லும்போது, அவை உங்கள் பற்களில் உள்ள அழுக்கு மற்றும் கறைளை சுத்தம் செய்ய உதவுகின்றன. இரண்டாவதாக, அவை கால்சியத்தின் சிறந்த மூலமாகும். குறிப்பாக, உங்கள் பற்களுக்கு இடையில் எள் விதைகள் சிக்கியிருந்தால் அவை உடனே அகற்றப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜாதிக்காய்
மசாலா பொருளாக மட்டுமின்றி, மருத்துவ குணமும் நிறைந்த ஜாதிக்காய் வாயில் பாக்டீரியாக்களில் வளர்ச்சியை தடுத்து, பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன் விளைவாக பற்கள் வெண்மையாக, அழகாக மாறிவிடும். இதற்கு ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியை எடுத்து விரல்களால் பற்களில் தடவி தேய்க்க வேண்டும். பின்னர், தண்ணீர் ஊற்றி கொப்பளித்து விடவும். பின்னர், பேஸ்ட் பிரஸ் கொண்டு வாயை துலக்கிட மறவாதீர்கள்.

பற்களை பளிச்சென்று மாற மேலே கூறிய வழிகளை தவறாமல் முயற்சித்து பாருங்கள். இருந்தாலும், தினந்தோறும் 2 வேளை பற்களை துலக்கி வேண்டியது அவசியமான ஒன்று. ஆரோக்கியமா பற்களின் ரகசியம் என்னவென்றால், தவறாமல் பல் துலக்குவது ஒன்றே.

https://www.youtube.com/watch?v=1saYpngHgrU
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)
Recommended for You
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க