Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

இந்த 6 ராசிக்காரர்களை என்ன செய்தாலும் புரிந்து கொள்ளவே முடியாது...

A
Admin User
Journalist
June 10, 2022 1 min read 29 views
இந்த 6 ராசிக்காரர்களை என்ன செய்தாலும் புரிந்து கொள்ளவே முடியாது...

உடனிருக்கும் ஒருவரின் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். தனக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இல்லாத மற்றும் கடைசி நிமிடத்தில் தனது திட்டங்களை மாற்றும் ஒருவரை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்களை ஒருபோதும் நம்பமுடியாது. இருப்பினும், புரியாத நபர்கள் நபர்கள் ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தாததால், சில நேரம் இது கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். உங்கள் வாழ்க்கையில் தன்னிச்சையாக விஷயங்களைச் செய்யும் கணிக்கவே முடியாத ராசிக்காரர்களைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

நம்மில் பெரும்பாலோர் எப்போதும் அத்தகைய நபர்களுடன் வேடிக்கையாக இருப்போம். ஆனால், நேரம் செல்லச் செல்ல, என்ன நடக்கப் போகிறதோ என்கிற மன அழுத்தமாக மாறும். அதன்பிறகு ஒரு போதும் வேடிக்கையாக இருக்காது. அவை உற்சாகமாகவும், தன்னிச்சையாகவும் இருந்தாலும், யாரும் அவர்களை உண்மையாக நம்ப முடியாத படி இருக்கும். கணிக்க முடியாத வாழ்க்கையை வாழ்வது சாகசமாகவும், சிலிர்ப்பாகவும் இருந்தாலும், அது வசதியாகவும் நிலையானதாகவும் எப்போதும் இருந்திடாது. எவராலும் கணிக்க முடியாத ராசிக்காரர்கள் ஒருபோதும் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது என்பதால் அவர்களுக்கு அது மிகவும் கடினம். எப்போது என்ன நடக்கும் என்று காத்திருக்கும் இந்த ராசிக்காரர்கள், எப்போது யாரும் எதிர்பாராத ஒன்றையே செய்வார்கள். சரி இப்போது அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்…

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மிகவும் திறந்த மனதுடன் இருப்பவர்கள் என்றும், புதிய யோசனைகளை எப்போது வேண்டுமானாலும் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் அறியலாம். இவர்கள் கற்றுக்கொள்வதற்கான எந்தவொரு புதிய வாய்ப்பையும் தவற விடமாட்டார்கள் மற்றும் ஒருவரது முகத்தை வைத்து அவர்களது திறமையை மதிப்பிடுபவர்கள் அல்ல. அவர்கள் தங்களை வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமானது. வேறொருவரின் யோசனையைப் பின்பற்றுவதும் மற்றவர்கள் செய்வதை செய்வதும் கும்ப ராசிக்காரர்களின் பாணி அல்ல. எனவே, அவர்கள் எப்போதும் சிறந்ததையே செய்ய நினைப்பார்கள். மேலும் யாரோ செய்யச் சொல்வதைச் செய்வது நிச்சயமாக அவர்களுக்கு பிடிக்காது. எனவே, இவர்கள் மிகவும் கணிக்க முடியாத ராசிகளில் முதலிடத்தில் உள்ளனர். மேலும், இவர்கள் எந்தவொரு தடையையும் சமாளிக்கும் திறனுடையவர்கள். அவர்களின் மன உறுதி மிகவும் வலுவாக இருப்பதால், திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கவில்லை என்றால் அவர்கள் தங்களைத் தாழ்த்தி கொள்ள மாட்டார்கள்.

மிதுனம்

மிகவும் மழுப்பலான, சாகச மற்றும் சிக்கலான ராசிகளில் ஒன்றாக, மிதுன ராசியுள்ளது. இவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்த தவறமாட்டார்கள். அவர்களின் ஆளுமை திறனால் அவர்களின் அடுத்தக்கட்ட திட்டம் என்னவென்பதை உறுதியாக யாராலும் யூகிக்க முடியாது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் மனதில் ஏதாவது ஒன்றைப் பற்றி யோசித்து கொண்டே இருப்பார்கள். எனவே, இவர்களை ஒருபோதும் கணிக்கவே முடியாது. இவர்களை சுலபமாக திசைத்திருப்பிட முடியாது என்பதற்காக இவர்கள் ஒரே விஷயத்தைப் பற்றி நீண்ட நேரம் யோசிப்பார்கள் என்று ஒருபோதும் அர்த்தமில்லை. அவர்கள் ஒரு வித்தியாசமான தகவலைக் கண்டுபிடித்தவுடன், முந்தைய விஷயத்தை மறந்துவிடாமல், அதைப் பற்றி சிந்திக்க தங்கள் முழு சக்தியையும் செலவிடுவார்கள். எனவே, அவர்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் வேலை செய்கிறார்கள் என்று எப்போதாவது உங்களிடம் சொன்னால், இதை ஒருபோதும் நம்பிவிடாதீர்கள். அவர்களிடம் நிச்சயமாக வேறு ஏதாவது திட்டம் கண்டிப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் எதையும் இழக்க விரும்ப மாட்டார்கள். எனவே, இவர்கள் எப்போதும் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதில் தீவிரமாக வேலை செய்து, எப்போதும் முதலிடத்தையே இலக்காகக் கொண்டிருப்பர். அவர்களின் ஆர்வம் எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்புவதாகவே இருக்கும். மேலும், ஒரு புதிய சாகசத்தை செய்திடவும் தயாராக இருப்பர். இதனால், இவர்களை மிகவும் கணிக்க முடியாத ராசிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒருபோதும் சும்மா இருக்கக் கூடியவர்கள் அல்ல. மேலும், இந்த நபர்கள் புதிய வாய்ப்புகளுக்காக ஆபத்தான பாதைகளையும் தைரியமாக தேர்ந்தெடுப்பர். எதிர்பார்த்ததைச் செய்வதும், திட்டப்படி நகர்வதும் அவர்களின் அகராதியிலேயே கிடையாது. இவர்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள். அவர்களின் கணிக்க முடியாத தன்மையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்கள்.

சிம்மம்

தலைவராவதற்காகவே பிறந்தவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள் எப்போதும் எடுத்த வேலையைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள். அவர்களின் சுறுசுறுப்பான மற்றும் துடிப்பான ஆளுமை அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். எனவே, அவை பொதுவாக எல்லாரும் புகழ்ந்து பேசப்படும். ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும் முதலிடத்தில் இருப்பது மற்றும் அவர்கள் விரும்பியதைப் பெறுவது சிம்ம ராசிக்காரர்களை மிகவும் கணிக்க முடியாத ராசிகளில் ஒன்றாக ஆக்குகிறது. பிறரது நிழலின் கீழ் இருக்கவும், பிறரது கட்டளைகளைப் பின்பற்றவும் இவர்கள் விரும்புவதில்லை. சாதாரண விஷயத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதன் மையமாக இருப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே அவர்கள் மிகவும் ஆச்சரியமான ஒன்றையே செய்வார்கள் என்று எளிதாக எதிர்பார்க்கலாம். அவர்கள் விரும்புவதைப் பெற எதிர்பாராத ஒன்றைச் செய்வது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான பகுதியாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள் மற்றும் உறுதியானவர்கள் மற்றும் தங்கள் இலக்கை அடைய எதற்கும் பயப்படுவதில்லை. இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் மற்றும் துரோகத்தை வெறுப்பவர்கள். உண்மை எவ்வளவு புண்படுத்தினாலும் முழு உண்மையையும் வெளிப்படுத்துவதில் அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள். இதனாலேயே அவர்கள் எல்லாவற்றையும் பற்றி முழுமையாக நேர்மையாக இருக்க வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கலாம். இருப்பினும், மறுபுறம், அவர்கள் மிகவும் பொறாமை கொண்டவர்கள் மற்றும் அவர்கள் விரும்புவதை வேறு யாராவது வைத்திருப்பதை இவர்களால் தாங்கவே முடியாது. விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை மிகவும் வலுவாக மதிக்கிறார்கள். யாரேனும் ஒருவர் மனதில் வைத்த அதே இலக்கை அடைந்தால், அது அவர்களால் தாங்க முடியாது. இவ்வாறு, கணிக்க முடியாத ஒன்றைச் செய்து, அவர்களின் செயல் அல்லது முழுத் திட்டத்தையும் மாற்றுவது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதாரணமானது. எனவே, அவர்கள் கணிக்க முடியாத ராசிகளின் வரிசையில் உள்ளனர்.

மேஷம்

மேஷம் அனைத்து ராசிகளின் வரிசையிலும் முதவானவர்களாக இருப்பதால் ஒரு தலைவராக இருக்க மிகவும் பொருத்தமானவர்கள். அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையைஹயம் கையாளுவதில் மிகவும் திறமையானவர்கள் மற்றும் இலக்கை அடைய அனைவருக்கும் கட்டளைகளை வழங்குவதற்கான அதிகாரத்தை வைத்திருப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. அவர்களின் தைரியமான இயல்பு காரணமாக, முற்றிலும் மாறுபட்ட மற்றும் புதிய ஒன்றை முயற்சிக்க அவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். அவர்கள் சாகசங்களை விரும்புபவர்கள் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அபாயங்களை எடுப்பதில் மிகவும் உற்சாகமாகப்படுவார்கள். இது அவர்களை கணிக்க முடியாத ராசிகளில் ஒன்றாக வைத்துள்ளது. ஏனெனில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர் ஒருவரால் மட்டுமே யோசிக்க முடியும். அவர்களின் மனக்கிளர்ச்சி, சூழ்நிலையை மதிப்பீடு செய்யாமல் விஷயங்களைச் செய்ய அவர்களை வழிநடத்துகிறது. கணிக்க முடியாத மற்றும் ஆபத்தான விஷயங்களைச் செய்வது மேஷ ராசியினரை மிகவும் கவர்ந்திழுக்கும். இவர்களும் கோப குணம் கொண்டவர்கள். எனவே, அவர்களுக்கு எது கோபத்தை ஏற்படுத்தும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

DOCTOR EXTRA SOFT Men's Classic Casual Sports Clogs/Sandals with Adjustable Back Strap for Adult | Comfortable & LightWeight| Stylish & Anti-Skid|Waterproof & Everyday Use Mules for Gents & Boys D-513
Recommended for You
DOCTOR EXTRA SOFT Men's Classic Casual Sports Clogs/Sandals with Adjustable Back Strap for Adult | Comfortable & LightWeight| Stylish & Anti-Skid|Waterproof & Everyday Use Mules for Gents & Boys D-513

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க