Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

உடல் எடையைக் குறைக்கனும்னா இந்த 4 பருப்புகளை உணவுல சேர்த்துக்கோங்க...

A
Admin User
Journalist
February 21, 2022 1 min read 22 views
உடல் எடையைக் குறைக்கனும்னா இந்த 4 பருப்புகளை உணவுல சேர்த்துக்கோங்க...

உடல் எடை அதிகரிப்பதற்கு முதல் காரணம் சீரற்ற உணவுப் பழக்கம் தான். ஆரோக்கியமான உணவுகளை சீரான முறையில் சாப்பிட்டால் மட்டும் தான் நம் உடல் எடையை மட்டுமல்ல மனநிலையையும் சீராக வைத்துக் கொள்ள உதவும். இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையால் அவதியுறுபவர்கள் நிறைய பேரைப் பார்க்க முடிகிறது. அதற்காக நிறைய டயட் முறைகளைப் பலர் பின்பற்றுகின்றனர். அப்படி முடியாதவர்கள் தங்களது உணவுகளைக் குறைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வதைப் பெரிதும் நம்புகின்றனர். அப்படிபப்பட்டவர்கள் தங்கள் உணவில் இந்த 4 பருப்பு வகைகளைச் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடை குறைவுக்கு பெரிதும் உதவிடும். வாருங்கள், இப்போது அந்த 4 வகை பருப்புகளைப் பற்றியும், அவை எப்படி உடல் எடை குறைப்பிற்கு உதவும் என்பதையும் பற்றி தெரிந்து கொள்வோம்…

பருப்பு வகைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

உணவில் தொடர்ந்து பருப்புகளை சேர்த்துக் கொள்பவர்களின் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதே நேரத்தில், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் ஆபத்தையும் குறைக்கும். மேலும், பருப்பு வகைகள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகின்றன. அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளும் இதை தொடர்ந்து உட்கொள்ளலாம்.

பாசி பருப்பு

உடல் எடை அதிகரித்திருந்தால், தினமும் பாசி பருப்பை சாப்பிட வேண்டும். அதிலும், பச்சை பாசி பயறு சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவிடும். அதே சமயம், பாசி பருப்பு அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் எதை சாப்பிட்டாலும், வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். அதனால் அதிக அளவில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.

சுண்டல்

சுண்டல் சாப்பிடுவது உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. ஒரு கிண்ணம் சுண்டல் சாப்பிடுவதால் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம் ஆகியவை உடலுக்கு கிடைக்கும். அதனால் தான் சுண்டல் ஒரு சூப்பர் உணவு என்றழைக்கப்படுகிறது. இது இதய நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

துவரம் பருப்பு

துவரம் பருப்புகளில் தாவர புரதம், நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், நிறைய கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அதனால் அவற்றை சாப்பிடவது பசியைக் கட்டுப்படுத்த உதவும். இதை சாப்பிட்டால் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். மறுபுறம், உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இந்த பருப்பை உட்கொள்வது பெரிதும் நன்மை பயக்கும்.

மசூர் பருப்பு

மசூர் பருப்புகளைச் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும். மசூர் பருப்புகளை ஒரு கிண்ணம் அளவிற்கு சாப்பிடலாம். ஏனெனில், இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இதில் கார்போஹைட்ரேட்களும் உள்ளது. அதனால், இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. அதனால், உண்ணும் உணவில் அளவு தானாக குறைந்திடும்.

DOCTOR EXTRA SOFT Men's Classic Casual Sports Clogs/Sandals with Adjustable Back Strap for Adult | Comfortable & LightWeight| Stylish & Anti-Skid|Waterproof & Everyday Use Mules for Gents & Boys D-513
Recommended for You
DOCTOR EXTRA SOFT Men's Classic Casual Sports Clogs/Sandals with Adjustable Back Strap for Adult | Comfortable & LightWeight| Stylish & Anti-Skid|Waterproof & Everyday Use Mules for Gents & Boys D-513

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க