Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மீன ராசிக்கு செல்லும் சூரியனால் இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாற போகிறது...

A
Admin User
Journalist
March 16, 2022 1 min read 15 views
மீன ராசிக்கு செல்லும் சூரியனால் இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாற போகிறது...

மார்ச் 15 அன்று சூரிய பகவான் தனது ராசியை மாற்றிகொண்டார். அதன்படி, நேற்றைய தினம் சூரியபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் பிரவேசித்தால். சூரிய பகவான் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுபவர். சில ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த ராசி மாற்றத்தால் பெரும் பலன் கிடைக்கப்போகிறது, சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமிது. வாருங்கள், சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் 12 ராசிகளுக்கும் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

மேஷம்

தாயின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய காலமிது. நீங்கள் வேலை தேடி ஏதேனும் நேர்காணலை சந்தித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்களது வருமானம் பெருகும். ஆனால், வேலைக்காக இடம் பெயர வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு, அவர்களது தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் உதவியும் கிடைக்கலாம்.

ரிஷபம்

குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களது மரியாதை அதிகரிக்கும். வருமானம் உயரும். இதனால் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் மகிழ்ச்சிகரமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரம் மேம்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய காலமிது. கடவுள் வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கலாம். பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்பு, ஆடைகள் போன்றவற்றிற்காக செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

கடகம்

மனம் அமைதியில்லாமல் இருக்கும். ஆனால் மார்ச் 18 முதல் உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தாரின் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு மேலோங்கும். ஆனால் பணியில் மாற்றம் ஏற்படலாம். குடும்பத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் திட்டத்தை உருவாக்கலாம்.

சிம்மம்

மன அமைதியைப் பெறும் காலமாக இருக்கும். உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு பெரிய மனிதரின் நட்பைப் பெறலாம். நண்பர்களின் உதவியால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நண்பருடன் வெளிநாட்டுப் பயணமும் மேற்கொள்ளலாம்.

கன்னி

உங்கள் மன அமைதியை பராமரிக்க வேண்டிய நேரமிது. குடும்பத்தாரின் வசதி வாய்ப்புகளில் அதிக அக்கறை காட்டுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை சுமையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். குடும்பத்தின் வயதான உறுப்பினரின் உதவியால் திடீர் பண வரவு சாத்தியமாகும்.

துலாம்

சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உயர்கல்வி அல்லது வேலைக்காக வேறு இடத்திற்கு செல்ல நேரிடலாம். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும். அலுவலகத்தில் பொறுப்புகளின் சுமை அதிகரிக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும். பதவி உயர்வு கிடைத்து, பொறுப்புகளும் விரிவடையும். ஆனால், குடும்பத்தை விட்டு வெளி ஊருக்கு செல்ல நேரிடலாம். இருப்பினும், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.

தனுசு

பழைய நண்பர்களின் திடீர் சந்திப்பு கிடைக்கும். அந்த நண்பரின் உதவியால் உங்கள் நல்ல வருமானம் ஈட்ட முடியும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறப்பிடமிருந்து தக்க தருணத்தில் நிதி உதவி கிடைக்கும். கல்வி, அறிவுசார் வேலைகளில் ஈடுபட்டோர் மிகவும் பரபரப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலனும் உடனடியாக கிடைக்கும்.

மகரம்

உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கலை அல்லது இசை மீதான ஆர்வம் உங்களுக்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு ஒத்துழைப்பும் உத்தியோகஸ்தர்களுக்கு இருக்கும். ஆனால், பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பழைய சொத்துகளின் மூலம் நிதி பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கும்பம்

உங்கள் வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அவர்கள் படிப்பில் பெரும் வெற்றி பெறுவார்கள். நண்பரின் ஆதரவால் நல்ல பலனைப் பெற்றிடலாம். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டிய காலமிது. ஆனால், உங்கள் கடின உழைப்பால் உங்களது வருமானமும் அதிகரிக்கும்.

மீனம்

இந்த காலக்கட்டத்தில் உங்களது குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். உத்தியோக மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும். வேலைக்காக வேறு இடத்திற்கு செல்ல நேரிடும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். ஆனால், வருமானம் அதிகரிக்கும். அதற்கேறப் செலவுகளும் அதிகரிக்கலாம் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்தவும். மாணவர்களின் படிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், வீண் இடையூறுகள் ஏற்படலாம்.

DSC Lava Kashmir Willow Short Handle Cricket Bat, Size - Mens
Recommended for You
DSC Lava Kashmir Willow Short Handle Cricket Bat, Size - Mens

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க