Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது தெரியுமா?

A
Admin User
Journalist
April 14, 2022 1 min read 24 views
2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது தெரியுமா?

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அதில் இந்த ஆண்டு 2022ம் வருடம் சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. இது 60 ஆண்டுகளில் 36 ஆவது ஆண்டாகும். சுபகிருது என்பதற்கு அர்த்தம் அதிக நன்மைகள் நிறைந்த என்று பொருள். இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டில் கிரகங்களின் நிலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்க முடியும். அந்த வகையில் 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த தருணத்தில் சூரியன், ராகு மற்றும் புதன் மேஷ ராசியிலும், சந்திரன் கன்னி ராசியிலும், கேது துலாம் ராசியிலும், சனி மகர ராசியிலும், செவ்வாய் மற்றும் சுக்கிரன் கும்ப ராசியில், குரு மீன ராசியிலும் இருக்கின்றனர். பொதுவாக ஒரு புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் போது, இந்த ஆண்டு நமது ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவருமே மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள். எனவே, இப்போது இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்…

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சுப விரையங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு, புத்திசாலிதனமாக யோசித்து நடந்தால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில், பெரிய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சிப்போருக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைக்கும். திடீர் பண வரவிற்கு வாய்ப்புண்டு. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். திருமணமானவர்களுக்கு கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த ஆண்டில் குடும்பத்தாருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிகுந்த நன்மை பயக்கும். பல வழிகளில் பண வரவு உண்டாகும். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இதுவரை ஆரோக்கியத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் படிபடியாக குறையும். திருமணமானவர்களுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி இணக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்
இதுவரை பல பிரச்சனைகளை சந்தித்த மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. உங்கள் வாழ்க்கையில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படப் போகிறது. இந்த ஆண்டில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால் இந்த ஆண்டில் மொத்த தொகையும் திரும்ப கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற பல புதுபுது வாய்ப்புக்கள் தேடிவரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். திருமணமானவர்களுக்கு இருந்தவந்த பிரச்சனைகள் நீங்கி, இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும்.

கடகம்
இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டில் கடக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ஆண்டில் உங்களுக்கு எவ்வளவு செலவு அதிகரித்தாலம், அதற்கேற்ப வரவும் இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு தொந்தரவுகளுக்கு ஆளானாலும் விரைவில் குணமடைவீர்கள். திருமணமாகாதவர்கக்கு இந்த ஆண்டில் திருமணம் நிச்சயம் நடக்கும்.

சிம்மம்
இந்த தமிழ் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கப் போகிறது. இதுவரை இருந்துவந்த தடைகள், கஷ்டங்கள் நீங்கி, படிப்படியாக முன்னேறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். திடீரென்று அதிர்ஷ்டத்தின் காற்று உங்கள் பக்கம் வீச தொடங்கும். பொருளாதார நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். அடிக்கடி காயங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், சற்று கூடுதல் கவனத்துடன செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரித்து, வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி
உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இந்த ஆண்டு அவற்றிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும். குடும்ப சூழலில் ஏற்ற இறக்கமான நிலைமை இருக்கக்கூடும். மேலும், இந்த ஆண்டில் முறையாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். பெற்றோரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அதிக ஆரோக்கிய பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக முன்னேற பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். மேலும், இந்த ஆண்டில் அவசர அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். திருமணமானவர்களுக்கு வாழ்வில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

துலாம்
சுபகிருது தமிழ் புத்தாண்டில் உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கும். அதிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை. திருமணமானவர்களுக்கு எதிர்பார்த்த குழந்தை பேறு இந்த ஆண்டு கிடைக்கும். உங்களிடையே புரிதலும் மேலோங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்
இந்த தமிழ் புத்தாணடில் எந்த ஒரு விஷயத்தையும் அவசரமாக செய்யாமல், பொறுமையைக் கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்களைப் பெறலாம். கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்கள் விடுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது. திருமணமானவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். கருத்துவேறுபாடுகள் நீங்கும். வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டில் நற்பலன்கள் காத்திருக்கின்றன. புதிய முதலீடு செய்ய நினைத்தால் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருக்கும். அடிக்கடி உடல்நல பிரச்சனைகளை சந்தித்தாலும், பெரிதாக எதுவும் இருக்காது. புதிதாக திருமணமானவர்கள் விட்டுக் கொடுத்து சென்றால், திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த ஆண்டு முதல், நீண்ட பிரச்சனைகள் அனைத்திலும் இருந்தும் விடுபடுவார்கள். திடீரென்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மேலும், உங்கள் குடும்பத்தாரும் உங்களை அனைவரும் புரிந்து கொண்டு நடப்பார்கள். வாழ்க்கைத் துணை இடையேயான மன குழப்பங்கள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். இந்த ஆண்டில் திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. சொந்தமாக தொழில் செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றலாம். உடல்நலம் சிறப்பாக இருக்க அதிகமாக வெளி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மன ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதிலிருந்து தப்பிக்க யோகா, தியானம் போன்றவற்றில் மனதை செலுத்துங்கள்.

மகரம்
சுபகிருது தமிழ் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சுறுசுறுப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. இதுவரை இருந்துவந்த மனசோர்வு நீங்கி, அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடன்பிறப்புகளுக்கு இடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை ஊக்குவிப்பார்கள். வீடு, வாகனம் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் நற்பலனைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு, திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் போது மிக கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தில் இருந்தவந்த பிரச்சனைகள் சற்று குறையும். சுக்கிரனின் அருளால் திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு அற்புதமான பலன்கள் வாரி வழங்கப்போகிறது. இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தாரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இதுதவிர, குடும்பத்தில் எதிர்பாராத சுப நிகழச்சிகள் நடக்கப் போகிறது. கடந்த காலத்தில் செய்த சில முதலீடு மற்றும் சேமிப்புகளால் தற்சமயம் நற்பலன்கள் கிடைக்கக்கூடும். இல்லத்தில் சுப செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் புரிதல் அதிகரிக்கும்.

மீனம்
உங்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை இந்த ஆண்டு உங்களுக்கு வழங்கவிருக்கிறது. இந்த ஆண்டு குடும்ப சூழலில் ஏற்றஇறக்கமான நிலை இருக்கும். இந்த ஆண்டை பொறுத்தவரை, உங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மனம் தளராது தைரியமாக எதிர்த்துப் போராடுங்கள். அதுதவிர, இந்த காலத்தில் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். உங்களுக்கு தேவையானதை நீங்களே கடினமாக போராடி பெற வேண்டியிருக்கும். இந்த ஆண்டில் பொறுமையாக இருந்தால் நற்பலன்களை நிச்சயம் பெற்றிடலாம். தொழில் ரீதியாக, பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். ஆரோக்கிய்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். உணவில் கவனம் செலுத்தினால் நிச்சயம் அதைத் தவிர்க்கலாம். மனநிலையை மேம்படுத்த தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள். திருமணமானவர்களுக்கு, வாழ்க்கைத் துணையுடன் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படும்.

4.5 Inch Adiyogi Statue with Rudraksh Mala/Resin Car Dashboard Idols/Lord Shiva for Pooja/Shivratri Gift/Decor/Shiv Murti/Mahadev Statues/Decorative Items for Home/Office(Black)
Recommended for You
4.5 Inch Adiyogi Statue with Rudraksh Mala/Resin Car Dashboard Idols/Lord Shiva for Pooja/Shivratri Gift/Decor/Shiv Murti/Mahadev Statues/Decorative Items for Home/Office(Black)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹273
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க