Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

குழந்தைகளின் வயிற்று புழுக்களைப் போக்க இந்த எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாமே...

A
Admin User
Journalist
May 19, 2022 5 min read 73 views
குழந்தைகளின் வயிற்று புழுக்களைப் போக்க இந்த எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாமே...

வீட்டில் குழந்தைகள் இருந்தால், வீட்டில் உள்ள பெரியவர்களின் கவனம் முழுவதும் அந்த குழந்தைகள் தான் இருக்கும். இந்த காலத்தில் குழந்தை பராமரிப்பு சற்று கடினமானதாகவே உள்ளது. ஏனென்றால், பெரும்பாலும் தனியாக வசிக்கும் பெற்றோர் பிறக்கும் பச்சிளம் குழந்தையை எப்படி பார்த்து கொள்வது என்பதை முழுவதுமாக அறிந்திருப்பது கிடையாது. அதனால், குழந்தை அழுதாலே உடனடியாக மருத்துவரை பார்க்க அழைத்து சென்று விடுகின்றனர். பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை சமாதானப்படுத்த நொறுக்கி தீனி, பதப்படுத்தப்பட்ட ஜூஸ் வகைகள் சாக்லேட்டுகள் போன்றவற்றை வாங்கி கொடுக்கின்றனர். இதுபோன்ற உணவுகள் உடலுக்கு நல்லதல்ல. இவற்றால் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க செய்வது மட்டுமின்றி, வயிற்றில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். வயிற்று புழுக்களும் இதனால் ஏற்படக்கூடும்.

வயிற்றில் புழு இருந்தால் குழந்தைகளுக்கு வயிற்று வலி, எரிச்சல் மற்றும் உடல் பலவீனம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். அதுதவிர, ​​குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும். வயிற்றுப் புழுக்களை அகற்ற பல்வேறு மருந்துகள் இருக்கின்றன. ஆனாலும், அவற்றை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்களும் இருக்கின்றன. இப்போது இந்த கட்டுரையில் வயிற்று புழுக்களை அகற்ற உதவும் வீட்டு வைத்தியங்களைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்…

துளசி இலைகள்

குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருப்பது தெரிய வந்தால், அதனை அகற்ற உங்கள் குழந்தைக்கு துளசி இலைகளைக் கொடுத்து வாருங்கள். வயிற்றுப் புழுக்கள் துளசி இலைகள் அல்லது துளசிச் சாற்றால் கொல்லப்படுகின்றன. இதனால், வயிற்றில் புழுக்கள் இருந்தால், குழந்தைகளுக்கு துளசி இலையின் சாற்றைக் கொடுத்து வாருங்கள். இதனால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறிவிடும்.

ஓமம்

குழந்தைகள் வயிற்று புழுக்களால் அவதிப்பட்டால், நீங்கள் அவர்களுக்கு ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை தண்ணீருடன் விழுங்க செய்ய வேண்டும். இந்த செயல்முறை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்துவர வேண்டும். இப்படி செய்வது வயிற்று புழுக்களைக் கொன்று, வயிற்று வலியைக் குறைத்திடும்.

தேங்காய் எண்ணெய்

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால் தேங்காய் எண்ணெயில் சமைத்த உணவுகளைச் சாப்பிட கொடுக்கவும். ஏனெனில், தேங்காய் எண்ணெய் வயிற்றில் உள்ள புழுக்களையும் நீக்க உதவிடும். எனவே, வயிற்று புழுக்களை அழித்தி இனி உங்கள் குழந்தைக்கான உணவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

பூண்டு

இயற்கையாகவே பூண்டின் கார தன்மைக்கு வயிற்று புழுக்கள் ஒழிந்திடும். எனவே, உங்கள் குழ்நதை வயிற்றில் புழுக்கள் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு நான்கு அல்லது ஐந்து பச்சை பூண்டு பற்களை சாப்பிட கொடுங்கள். இதனால், இனி வயிற்றில் புழுக்களின் தொல்லை இருக்காது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க