ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் நேரடியாக மனித வாழ்வில் ஏற்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் பல பெரிய கிரகங்கள் ராசி மாற உள்ளன. அதிலும் கர்ம வினைகளுக்கான பலனை அளிக்கும் சனி பகவான் தற்போது மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசியில் பிரவேசிக்க போகிறார். மகரம் மற்றும் கும்பம் சனிபகவானின் ராசிகளாக கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த வீடான கும்ப ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கப் போகிறார். அதிலும், சனி பகவான் மார்ச் 26 அன்று உதயமானார். சனியின் சஞ்சாரம் மற்றும் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் பூரண அருள் கிடைக்க போகிறது என்பதை இந்த கட்டுலையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உங்கள் ராசியும் உள்ளதாக என்பதை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

மேஷம்
சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் கர்மா, தொழில், வேலை மற்றும் வியாபாரம் ஆகிய ஸ்தானத்தில் உதயமாகியுள்ளார். அதனால்தான் உங்கள் ஜாதகத்தில் தற்போது ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் நீங்கள் பெரும் செல்வ செழிப்பைப் பெறலாம். இந்த நேரத்தில் அரசியலில் தொடர்புடையவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். உங்கள் நிலை மேலோங்க போகிறது.

ரிஷபம்
சனிபகவானின் உதயத்தால் உங்கள் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகியுள்ளது. அதனால், இந்த நேரத்தில் வியாபாரிகளுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கலாம். மேலும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறும். இந்த நேரத்தில், நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்
சனி பகவான் ஏழாவது வீட்டில் அதாவது திருமண வாழ்க்கை ஸ்தானத்தில் தோன்றியுள்ளார். இதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வலுப்பெற போகிறது. அதுதவிர, சனி பகவானின் இந்த உதயம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டால் உங்கள் அனைத்து பணிகளும் முன்னேறி சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள்.

துலாம்
சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் இன்பம், வாகனம், பெற்றோர் ஸ்தானத்தில் தோன்றியுள்ளார். எனவே, உங்கள் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை பெரிதும் மேம்பட போகிறது. அதுதவிர, உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
30 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த வீட்டு வரப்போகும் சனி பகவான், தற்போது மகர ராசியில் உதயமாவது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். மேலும், கும்ப ராசிக்காரர்களுக்கு சனி உதயமாகி செல்வ வளத்தை வாரி வழங்க போகிறார். இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறலாம். அதுதவிர, உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பாராட்டுகள் வந்து சேரும்.

மீனம்
மீன ராசிக்கு 11ம் வீட்டில் சனிபகவான் உதயமாகியுள்ளார். இதனால், உங்கள் வருமான திடீரென அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மேலோங்கி, உங்கள் மீதான மரியாதை அதரிக்கக்கூடும். மேலும், இந்த நேரத்தில் தேவையற்ற செலவுகள் அனைத்தும் நிறுத்தப்படும். இதனால் சேமிப்பு அதிகரித்து தக்க தருணத்தில் உதவிடும்.