Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

கும்பத்திற்கு பெயர்ச்சியான சனியால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்...

A
Admin User
Journalist
May 09, 2022 1 min read 34 views
கும்பத்திற்கு பெயர்ச்சியான சனியால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்...

நவகிரகங்களில், கருமவினைகளுக்கான கடவுளான சனி பகவான் முக்கிய இடம் வகிக்கிறார். இவர் நவகிரகங்களில் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். மற்ற கிகரங்களைக் காட்டிலும் சனி ஒரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்றால் அனைவருக்குமே சற்று கலக்கத்தை உண்டு பண்ணும். கடவுளையே விட்டு வைக்காத சனி பகவான், நம்மை விட்டு விடுவாரா? அதனாலேயே, ஒருவருக்கு சனி திசை ஆரம்பமாக போகிறது என்றால், கஷ்ட காலம் வர போகிறது என்று நினைக்கின்றனர். சனி திசையான 3 கட்டங்களாக பிரிக்கப்படுகிறது. சனி பகவானின் திசையில் ஒரு கட்டம் என்பது இரண்டரை ஆண்டுகளைக் குறிக்கும். அதன் முதல் கட்டத்தில் தான் சனி பகவான் பல கஷ்டங்களைக் கொடுப்பார். இரண்டாம் கட்டத்தில் அவ்வளவு பாதிப்பு இல்லாவிட்டாலும், கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், 3ம் கட்டத்தில் சனிபகவான் நன்மைகளையே செய்வார். ஒரு ராசியில் இருந்து சனி விலகுகிறார் என்றால், அவர்களுக்கு நன்மைகளை வாரி வழங்கி விட்டு தான் செல்வார்.

இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சனி பகவான், அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகர்பவர். ஜோதிடத்தில் சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சில ராசிக்காரர்கள் சனியின் ராசி மாற்றத்தால் பலன் அடைந்தாலும், சில ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். சனி பகவான் ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்துள்ளார். சனியின் ராசி மாற்றத்துடன் சில ராசிகளில் சனியின் திசை தொடங்குவதோடு, சில ராசிகளில் சனியின் திசை முடிவடைகிறது. எனவே, தற்போதைய சனியின் ராசி மாற்றத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

கடகம்

கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகி இருக்கும் சனி பகவானால், கடக ராசிக்காரர்களுக்கு சனி திசை ஆரம்பமாகிறது. சனியின் திசை ஆரம்பிக்கிற என்றாலே, அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எத்தகைய சூழ்நிலையில் நிதானத்தை இழக்கக்கூடாது. மேலும், பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாக யோசித்து பயன்படுத்த வேண்டும். உங்கள் பேச்சாலேயே பிரச்சனையை வரவழைத்து கொள்ளும் நேரமிது. குறிப்பாக, அலுவலகத்தில் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பரிகாரம்

சனிக்கிழமையன்று, ஊனமுற்றோருக்கு உங்களால் முடிந்த உணவு, பொருள் தானம் வழங்க சனி பகவானின் பரிபூரண அருளைப் பெற்றிடலாம்.

விருச்சிகம்

சனிபகவான் கும்ப ராசிக்கு சென்றிருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் பார்வை விழத் தொடங்கியுள்ளது. சனியின் பார்வை விழும் போது ஒருவருக்கு பல வகையான பிரச்சனைகள் வரிசையாக வரக்கூடும். பல்வேறு இன்னல்கள் உங்களை சூழ்ந்து கொள்ளலாம். அவசரமாக எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். அவசர முடிவுகள் அவஸ்தையில் முடியக்கூடும். எனவே, இந்த காலக்கட்டத்தில் பொறுமையைக் கையாளுவது மட்டுமே உங்களுக்கான ஒரே தீர்வு.

பரிகாரம்

சனிபகவானின் பார்வையை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு ஊதா நிற மலரால் அர்ச்சனை செய்து வர பிரச்சனைகளைக் குறைத்திடலாம்.

மீனம்

சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைவதால் சனியின் முதல் கட்ட இரண்டரை ஆண்டு காலம் மீன ராசிக்காரர்களுக்கு ஆரம்பமாகியுள்ளது. சனியின் முதல் கட்டம் என்பதால் மீன ராசிக்காரர்களுக்கு இது கஷ்ட காலமாக இருக்கக்கூடும். எதிலும் நிதானம் தேவை. முக்கியமான பேச்சில் கட்டுப்பாடு தேவை. இது ஆபத்தான காலம் என்பதால், எந்தவொரு பெரிய முடிவுகள் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. சனி பகவான் முதற்கட்ட திசையின் போது, ஒருவர் தன்மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடும்பம், தொழில், வேலை, ஆரோக்கியம் என அனைத்து விஷயங்களிலும் பலமுறை யோசித்து நிதானமாக முடிவெடுத்தால் நல்லது.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்றி, 9 முறை வலம் வந்து வழிபட்டு வர சனிபகவானின் அருளைப் பெற்றிடலாம்.

Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
Recommended for You
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க