நவகிரகங்களில் முக்கிய இடம் வகிப்பவர் சனி பகவான். இவர் நீதிமான், கர்ம வினைகளை வழங்குபவர் என்றும் அழைக்கப்படுவர். மேலும், நவகிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமான கருதப்படுகிறது. அவை அனைத்து ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும். இவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது சனி பகவானின் பெயர்ச்சி தான். ஜோதிட சாஸ்திரங்களின் படி, நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இவர், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற எடுத்துக் கொள்ளும் கால அவகாசம், இரண்டரை ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் சனி பகவான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். அதிலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். சனி பகவானின் இந்த பெயர்ச்சியால், சில ராசிக்கு ஏழரை சனி தொடங்குவதோடு, சிலருக்கு அஷ்டம, அர்தாஷ்டம சனியும் ஆரம்பமாக உள்ளது. சிலர் சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். 30 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்டகார ராசிகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்…
சனி பெயர்ச்சியால் உண்டாகும் மாற்றங்கள்
சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் பிரவேசிக்க போகிறார். கும்ப ராசியானது சனிபகவானுக்கு சொந்த ராசியாகும். இந்த நிலையில் சனி பகவான் 30 வருடங்களுக்குப் பிறகு கும்ப ராசிக்கு பெயர்ந்து போகிறார். கிரகங்களில் பிரதான கடவுளாக கருதப்படும் சனி பகவான் 2022-ஆம் ஆண்டு இரண்டு முறை தன் நிலையில் இருந்து மாறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர் ராசியையும் மாற்றுவது அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது. சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தவுடன் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் ஆரம்பமாகும். இதனுடன் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியும் தொடங்கும். ஏழரை நாட்டு சனி இந்த ராசிக்காரர்களை பல வழிகளில் தொந்தரவு செய்யும்.
சனிபகவானின் இந்த பெயர்ச்சியால் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடுவர். மேலும், கடகம் மற்றும் விருச்சி ராசிகளுக்கு சனியின் பார்வை தொடங்குகிறது. சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிலும், சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். எப்படி இருந்தாலும், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்ல காலமாகவே இருக்கும்.
சரி இப்போது, சனி பகவான் கும்ப ராசிக்குள் பிரவேசிப்பதால் நன்மை அடையக் கூடிய 4 ராசிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். உங்கள் ராசி இதில் இருக்கிறதா என்பதை மேற்கொண்டு தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்…

மேஷம்
கும்ப ராசிக்குள் பிரவேசிக்கும் சனியால், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல அற்புதமான வாய்ப்புக்கள் தேடி வர போகின்றன. அதுமட்டுமின்றி, வாழ்வில் சிறப்பான வெற்றியைப் பெற போகிறீர்கள். உங்களின் நிதி நிலை மேலோங்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புக்களும் உண்டு. வணிகர்களுக்கு சிறப்பாக காலமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் சாதகமானதாக இருக்கும். மேலும் இந்த காலக்கட்டம் மாணவர்களுக்கு சாதகமான காலமாகவே இருக்கும்.

ரிஷபம்
சனியின் ராசி மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான காலம். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். மேலும், உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அனைத்து விதமான ஆடம்பரங்களும், சுகபோகங்களும் நிறைந்திருக்கும். விரும்பிய வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வெளியூர் சென்று வேலை பார்க்க முயற்சிப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பம் நிறைவேறும். இக்காலத்தில் உங்களது குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும், சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புக்கள் உண்டாகும்.

சிம்மம்
சனி பகவான கும்ப ராசிக்குள் வரும் நேரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக மாறும். எப்போதும் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். நிலம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கு இது சிறந்த காலமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளும் திறக்கப்படலாம். கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள முடியும். தொழிலதிபர்கள் தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு சாதகமான காலமாக இருக்கும். புதிய தொழிலில் பணத்தை முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கலாம். நீண்ட கால சட்ட சிக்கல்களும் இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சனியின் பிடியில் இருந்து விடுபட போவதால் உங்களது அனைத்து பிரச்சனைகளும் நீங்க போகின்றன. மேலும், சனி பகவானின் அருளை இந்த ராசிக்காரர்கள் பெற போகிறார்கள். இதனால், அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. முன்னோரின் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் உண்டாகும்.