Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

குளிர்காலத்துல எதுக்காக மீன் அதிகமா சாப்பிடணும்னு சொல்றாங்க தெரியுமா?

A
Admin User
Journalist
December 07, 2021 1 min read 28 views
குளிர்காலத்துல எதுக்காக மீன் அதிகமா சாப்பிடணும்னு சொல்றாங்க தெரியுமா?

பொதுவாக கோடைக்காலத்தை விட அனைவருக்கும் பிடித்தது குளிர்காலம் தான். ஏனென்றால், குளிர்காலத்தில் அதிகப்படியான வியர்வை, சோர்வு இருக்காது என்பதற்காக. ஆனால், கோடைக்காலத்தை விட குளிர்காலத்தில் தான் நம் உடல் மிகவும் சோர்வாகவும், மந்தமாகவும் உணரும். அதுமட்டுமில்லாமல், குளிர்காலத்தில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையக்கூடும். அதனால் தான் நமக்கு எளிதில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நமது உணவில் நாம் அக்கறை காட்டாமல் இருப்பது தான். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக மீனை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

குளிர்காலம் ஆரம்பித்தவுடன் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது தான். ஏனென்றால், கோடைகாலத்தை விட குளிர்காலத்தில் தான் பாக்டீரியாக்களால் பரவும் நோய்கள் அதிகம். காற்றின் ஈரப்பதம் அவற்றின் இனப்பெருக்கத்தை எளிதாக்கி விடுகின்றன. அதனால், குளிர்காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமது உடலை நோய்களிடம் இருந்து காப்பாற்ற முடியும். அதற்கு ஏற்ற உணவு தான் மீன். சரி வாருங்கள் எதற்காக மீனை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட சொல்கிறார்கள் என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

இருமல் மற்றும் சளியை எதிர்த்துப் போராடும் - மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நுரையீரலுக்கு தேவையான காற்றோட்டத்தை அதிகரிக்க உதவிடும். எனவே, உங்கள் நுரையீரலை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்திட முடியும்.

சரும பாதுகாப்பு - குளிர்காலத்தில், நமது தோல் அடிக்கடி வறண்டு காட்சியளிக்கும். மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமம் வறண்டு போவதைத் தடுக்க உதவுகிறது.

நல்ல கொழுப்பு - மீனில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், மீன் சாப்பிடுவது தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

ஆரோக்கியமான இதயம் - மீனில் உள்ளதாக நிரூபிக்கப்பட்டள்ள பூஜ்ஜிய நிறைவுற்ற கொழுப்பு இதயத்திற்கு நன்மையளிக்கக் கூடியது. வாரத்திற்கு ஒரு முறை மீன் சாப்பிடுவது இதய நோய்களைத் தடுக்க உதவிடும்.

வைட்டமின் டி- மீனில் அதிகமாக உள்ள வைட்டமின் டி மற்ற ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு மிகவும் உதவக்கூடியது. எனவே, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மீன் உதவிடும்.

கண்களுக்கு நல்லது - ஆரோக்கியமான கண்களுக்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மீன் அதிகம் உள்ளது. சுகாதார ஆராய்ச்சி மற்றும் தரத்திற்கான அமைப்பும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவும் - குளிர்காலங்களில் உங்களுக்கு அதிகப்படியான சோர்பு மற்றும் சோம்பல் ஏற்படக்கூடும். அப்படி நீங்கள் குளிர்காலத்தில் மிகவும் சோர்வாக உணர்ந்தால் அதிகமாக மீன் சாப்பிடத் தொடங்குங்கள். தி ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி & நியூரோ சயின்ஸின் கூற்றுப்படி, மீன் மற்றும் மீன் எண்ணெயை வழக்கமாக உட்கொள்வது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவிடுமாம்.

pTron Newly Launched Fusion Tunes 10W Mini Bluetooth Speaker with Wireless Karaoke Mic, 8Hrs Playtime, Vivid RGB Lights, Voice Effects
Recommended for You
pTron Newly Launched Fusion Tunes 10W Mini Bluetooth Speaker with Wireless Karaoke Mic, 8Hrs Playtime, Vivid RGB Lights, Voice Effects

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க