Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

ரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் கிலாஃபி கபாப்!!!

A
Admin User
Journalist
May 02, 2022 5 min read 92 views
ரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் கிலாஃபி கபாப்!!!

ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாப்படவுள்ளது. ரம்ஜான் என்றாலே அன்பையும், உணவையும் பரிமாறிக்கொள்ளும் அற்புத பண்டிகை. இந்த ரம்ஜானுக்கு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு சற்று வித்தியாசமான ரெசிபி செய்து கொடுத்து அசத்த வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், சிக்கனை வைத்து கிலாஃபி கபாப் செய்து பாருங்களேன். நிச்சயம் இதை சாப்பிடும் அனைவருமே உங்களைப் பாராட்டி தள்ளுவார்கள். சரி வாருங்கள், இப்போது சிக்கன் கிலாஃபி கபாப் எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • சிக்கன் - 200 கிராம்
  • வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
  • குடைமிளகாய் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 3
  • உப்பு - சுவைக்கேற்ப
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி - 10
  • தோலுரிக்கப்பட்ட பாதாம் - 10
  • மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
  • பூண்டு இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • சீரக தூள் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
  • ப்ரெஷ் கிரீம் - 2 டெபிள் ஸ்பூன்
  • கியோரா வாட்டர் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • புதினா - சிறிதளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இப்போது, அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பூண்டு இஞ்சி விழுது, சீரக தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கவும்.
  • மேலும், ப்ரெஷ் க்ரீம், பச்சை மிளகாய், கியோரா வாட்டர், முந்திரி, பாதாம் என அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸர் கிரைண்டரில் நன்கு அரைத்து கொள்ளவும்.
  • இப்போது தயார் செய்த சிக்கன் பேஸ்ட்டை பெரிய கபாப் குச்சிகளில் ஐஸ்க்ரீம் மாதிரி உருட்டி வைக்கவும்.
  • அடுத்ததாக ஒரு தட்டில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கொத்தமல்லி இலைகளை எடுத்து வைக்கவும்.
  • தயாரித்த கபாப் குச்சிகளை காய்கறிகளில் உருட்டி, காய்கறிகள் சுற்றிலும் ஒட்டும் படியாக தயார் செய்யவும்.
  • பின்னர், ஓவனை முதலில் 180 டிகிரியில் 5 நிமிடங்களுக்கு சூடேற்றிய பின்னர், இந்த சிக்கன் கபாப் குச்சிகளை எட்டு முதல் பத்து நிமிடங்களுக்கு ஓவனில் வேக வைத்து எடுத்தால் கிலாஃபி கபாப்பை பரிமாற தயார்…
  • ஒருவேளை உங்கள் வீட்டில் ஓவன் இல்லையென்றால், ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கபாப் குச்சிகளை வேக வைத்தும் எடுக்கலாம். அடுப்பை குறைவான தீயில் வைத்து திருப்பி போட்டபடி வேக வைக்கவும். கபாப் அனைத்து பக்கங்களிலும் நன்கு வெந்திருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
  • இந்த கிலாஃபி கபாப்பை புளிப்பு புதினா சட்னி மற்றும் பேரீச்சம்பழம் புளி சட்னியுடன் பரிமாறனால் அற்புதமாக இருக்கும்.
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க