Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மேஷத்தில் இருக்கும் ராகுவால் அடுத்த 14 மாதங்களும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தே இருக்கும்...

A
Admin User
Journalist
June 07, 2022 1 min read 24 views
மேஷத்தில் இருக்கும் ராகுவால் அடுத்த 14 மாதங்களும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தே இருக்கும்...

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் 9 கிரகங்களின் ராசி மாற்றங்கள் காணப்பட்டன. இந்த 9 கிரகங்களில் சக்தி வாய்ந்த மற்றும் பலன் தரும் கிரகங்களாக கருதப்படும் சனி, வியாழன், ராகு-கேது ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றியுள்ளன. ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளில் சனி தனது ராசியை மாற்றிய இடத்தில், குரு ஒரு வருடத்திலும், ராகு-கேது ஒன்றரை வருடத்திலும் தனது ராசியை மாற்றிவிட்டது. இப்போது 2022ல் ராசி மாற்றி கொண்ட ராகுவைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொள்வது வழக்கம். கிரகங்களின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரக மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கக்கூடும். நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு ஏப்ரல் 12, 2022 அன்று மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேஷ ராசியானது செவ்வாய் பகவானின் சொந்த வீடாகும்.

ஜோதிடத்தின் படி, ராகு எப்போதும் தலைகீழ் திசையில் அதாவது பின்னோக்கி நகரக்கூடியவர். ஜோதிடத்தில் எந்த ராசிக்கும் ராகுவிற்கு உரிமை இல்லை. ஜோதிடத்தில், தொற்றுநோய்கள், அரசியல், குழப்பம், பயணங்கள் மற்றும் பங்குகள் போன்றவற்றிற்கு காரணமாக கிரகமாக ராகு கருதப்படுகிறார். அத்தகைய ராகுவின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்திருக்கும். ஆனால், சில ராசிக்காரர்கள் மட்டும் இந்த ஆண்டு முழுவதும் ராகுவின் சுப பலனை முற்றிலுமாக அனுபவிக்க போகிறோர்கள். மீதமிருக்கும் இந்த ஆண்டு முழுவதிலும் சுப பலன்களை காணப்போகும் ராசிக்காரர்களைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்….

ரிஷபம்

ராகுவின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். செல்வம், மகிழ்ச்சி, பெருமை, கௌரவம், பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். ராகுவின் இருப்பிடம் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ரிஷப ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீங்கள் பல ஆதாரங்களில் இருந்து பணம் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் தற்போது செய்யும் வேலையில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். மேலும் பண வரவை அதிகரிக்க பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அவற்றிலும் நீங்கள் நிச்சயமாக வெற்றியைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். வருமானத்தில் அபரிமிதமான உயர்வு காணப்படும். ராகுவின் ராசி மாற்றம் வியாபாரிகளுக்கு எந்த விதமான குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால், நீங்கள் நிச்சயமாக ஒவ்வொரு வேலையிலும் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் ராகு உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். நாளுக்கு நாள் உங்கள் வெற்றியின் பட்டியலானது அதிகரித்துக் கொண்டே போகும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். தொடர்ந்து மரியாதை மற்றும் கௌரவும் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டின் கடைசியில் நீங்கள் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்கள் வருமானம் மற்றும் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய வளர்ச்சிக்கான சாத்தியங்களும் தென்படும். மிகவும் கஷ்டப்பட்டு வணிகம் செய்வோருக்கு இந்த காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் தேடி வரக்கூடும். கிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கொண்டால் அதிர்ஷ்டம் உங்கள் வசம் இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் மிகவும் அன்பானவராக இருப்பார். கடக ராசிக்காரர்களுக்கு ராகுவால் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் மத்தியில் பெரிய பதவி கிடைக்கும். கடந்த வருடம் வேலையில் நல்ல நேரமாக அமையாதவர்களுக்கு இனி வரும் காலம் நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். வேலை மாறுவதைப் பற்றி யோசிப்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். முன்னேர் சொத்துக்களை விற்பதன் மூலம் உங்கள் நிதி நிலை மேம்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு பல ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. முதலீடு விஷயத்தில், நீங்கள் செய்யும் ஒவ்வொரு முதலீட்டிலும் பெரும் லாபம் ஈட்ட முடியும்.

4.5 Inch Adiyogi Statue with Rudraksh Mala/Resin Car Dashboard Idols/Lord Shiva for Pooja/Shivratri Gift/Decor/Shiv Murti/Mahadev Statues/Decorative Items for Home/Office(Black)
Recommended for You
4.5 Inch Adiyogi Statue with Rudraksh Mala/Resin Car Dashboard Idols/Lord Shiva for Pooja/Shivratri Gift/Decor/Shiv Murti/Mahadev Statues/Decorative Items for Home/Office(Black)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க