Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

இந்த 4 ராசிக்காரர்களின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா?

A
Admin User
Journalist
May 10, 2022 1 min read 26 views
இந்த 4 ராசிக்காரர்களின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா?

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த அதிபதியாக ஒரு கிரகம் இருப்பதால், அந்த கிரகத்தின் நிலைமையைப் பொறுத்தே ஒரு நபரின் நன்மை, தீமைகள் கணிக்கப்படுகின்றன. ஜோதிடத்தின் பார்வையில், சில ராசிகளின் அதிபதியான கிரகங்கள் உக்கிரமான மனநிலையில் இருக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், அந்த ராசிகளை கொண்டவர்கள் பிறப்பிலிருந்தே அதிகப்படியாக கோபப்படும் குணத்தைக் கொண்டிருப்பர். இந்த பழக்கத்தை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த கோபம் அதிகமாகி, அந்த நபர் தன்னை தானே வருத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. அந்த வகையில், எந்த ராசிக்காரர்கள் மிக கோபக்காரர்கள் என்பதை இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் நவ கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். இது நெருப்பு சுபாவமுள்ள கிரகம். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களின் இயல்பில் சாதாரணமாகவே கோபம் இருக்கக்கூடும். செவ்வாய் வீரம் மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுபவர். இந்த காரணத்திற்காகவே, மேஷ ராசிக்காரர்களும் மிகவும் தைரியமானவர்களாக காணப்படுவார்கள். இவர்கள் எந்தவொரு வேலையையும் செய்ய பயப்பட மாட்டார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் அகங்காரத்தில் சிறிய விஷயங்களுக்காக கூட கோபப்படுவார்கள். இவர்களின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. அது மிகவும் கடினமாக ஒன்று.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி நெருப்பு கிரகமான சூரியன். சொல்லப்போனால், இந்த ராசிக்காரர்கள் சூரியனைப் போல பிரகாசமாக இருப்பார்கள். குறிப்பாக, அவர்கள் ஒரு ராஜாவைப் போல சுதந்திர மனநிலையுடன் செயல்படுவார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், மிக விரைவாகவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார்கள். ஆனால், அவர்களுக்கு கோபம் என்று வந்தால் பிறரை சுட்டெரிக்கும் வகையில் வரக்கூடும். கோபத்தின் காரணமாக, அவர்கள் சில சமயங்களில் தங்களையே வருத்தி கொள்ளவும் முற்படுவார்கள். அவர்கள் எப்போது, ​​எதற்காக கோபப்படுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத ஒன்று.

தனுசு

ராசிக்களுக்குள் பெரிய அதிபதி என்றால் அது தனுசு. அதனாலேயே இவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவே இருப்பார்கள். கல்வி மற்றும் அறிவை வளர்த்து கொள்வதில் அதீத ஆர்வம் கொண்டிருப்பர். எப்போதும் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருப்பார்கள். அதுதவிர, மற்றவர்களுக்கும் கற்று கொடுக்கும் குணம் கொண்டவர்கள். ஆனால், இவர்களது ராசியானது நெருப்பை மையமாக கொண்டிருப்பதால் இவர்களுக்கு கோபம் அதிகமாக வரும். அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் கோபப்பட்டால், அவர்களை சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. புத்திசாலியாக இருப்பதால், அவர்களுக்கு அபாரமான வாத திறமையும் உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிரில் இருப்பவரிடம் வாதாடி எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் தன்வசப்படுத்தும் திறன் உடையவர்கள். கோபத்தின் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் சில நேரங்களில் தங்கள் சொந்த உறவுகளைக் கெடுத்து கொள்வார்கள். கோபத்தால் பிறரைக் காயப்படுத்தும் குணமும் இவர்களிடம் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதியும் செவ்வாய்தான். இந்த ராசிக்காரர்கள் சுயமரியாதை என்பது மிகவும் முக்கியமானதாக கருதுபவர்கள். சுயமரியாதையை தக்க வைத்துக்கொள்ள எதையும் செய்யும் துணிச்சல் இவர்களுக்கு உண்டு. யாராவது தங்கள் மானத்திற்கு கலங்கம் ஏற்படுத்த நேரிட்டால், அவர்கள் கோபத்தின் எந்த எல்லைக்கும் செல்ல அஞ்சமாட்டார்கள். இவர்கள் யாரிடமாவது கோபப்பட்டால், எதிரில் இருப்பவர்களுக்கு பாடம் கற்பித்து விட்டு தான் மூச்சே விடுவார்கள். இதன் காரணமாக பல சமயங்களில் தனக்கு தானே தீங்கிழைத்து கொள்வதும் உண்டு. கோபத்தின் உச்சத்தை அடைந்தால் இடம், பொருள், ஏவல் பார்த்து பேசும் பழக்கமெல்லாம் இவர்களிடம் இருக்காது. யாராக இருந்தாலும் கோபத்தில் எரித்து விடுவார்கள்.

VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women
Recommended for You
VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க