Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

இந்த பிளட் குரூப் காரங்க சிக்கன், மட்டன்லாம் சாப்பிடவே கூடாதாம். இது உங்க பிளட் குரூப்பானு பாருங்க...

A
Admin User
Journalist
March 17, 2022 1 min read 21 views
இந்த பிளட் குரூப் காரங்க சிக்கன், மட்டன்லாம் சாப்பிடவே கூடாதாம். இது உங்க பிளட் குரூப்பானு பாருங்க...

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் குணதிசயங்கள் மாறுபடும். அவை, அவர்களது முன்னோர்களின் மரபணு, பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளை பொருத்ததாக இருக்கும். அதிலும், இரத்த வகையை பொருத்தும் ஒருவருடைய குணம் மாறுபடும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர, ஒருவர் என்னதான் ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் அவர்களது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருக்க நேரிடும். அதன் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றிற்கான ஓர் அடிப்படை காரணம் இயற்கை மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரது இரத்த வகைக்கு ஏற்ப அவரது உணவு பழக்கம் இருக்குமாயின், நிச்சயமாக அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் என்கின்றனர்.

இரத்த வகைக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடும் போது, உணவு எளிதில் செரிக்கப்படும். ஏனென்றால், முன்பே கூறியது போல் ஒவ்வொரு இரத்த வகையினருக்குமென தனித்துவமான தன்மை மற்றும் இயல்பு உள்ளது. அதனால் தான், இரத்த வகைக்கும், உண்ணும் உணவிற்கும் தொடர்பு உண்டு என கூறப்படுகிறது. பொதுவாக 4 வகையான அடிப்படை இரத்த வகைகள் உள்ள. ஓ, ஏ, பி மற்றும் ஏபி ஆகியவை. இப்போது ஒவ்வொரு இரத்த வகை உள்ளவர்களும் சாப்பிட வேண்டியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

'O' குரூப்

ஓ வகை இரத்தம் உள்ளவர்கள் அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு, இறைச்சி, மீன், பழங்கள், போன்றறை இதில் அடங்கும். உங்கள் உணவில் தானியங்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளின் அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

'A' குரூப்

நிபுணர்களின் கூற்றுப்படி, A இரத்தக் குழுவைக் கொண்டவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் உணர்திறன் கொண்டது. எனவே, அவர்கள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய நபர்கள் இறைச்சி இல்லாத உணவை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். உண்மையில், அவர்களது உடலால் இறைச்சியை எளிதில் ஜீரணிக்க முடியாது. அதனால்தான் இந்த நபர்கள் சிக்கன்- மட்டனை குறைவாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே சமயம், இந்த ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மிகச் சிறந்த செரிமான அமைப்பைக் கொண்டிருப்பதால், அவர்களின் உடலில் கொழுப்பு சேராது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நபர்கள் பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், முட்டை போன்றவற்றை அதிகம் உட்கொள்ளலாம்.

'B' குரூப்

இரத்த வகை B உள்ளவர்கள், தங்களது உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள், தானியங்கள், முட்டை, இறைச்சி மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இவர்கள் சிக்கன், சோளம், வேர்க்கடலை மற்றும் கோதுமை ஆகியவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

'AB' குரூப்

AB வகை இரத்தம் உள்ளவர்கள் பால், டோஃபு, ஆட்டிறைச்சி, மீன், தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். ஏபி வகை இரத்தம் உள்ளவர்களுக்கு வயிற்றில் அமில சுரப்பு மிக மிக குறைவாக இருக்கும். அதனால், இந்த வகை ரத்தம் உள்ளவர்கள் காபி, ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றைத் தவிர்த்தே ஆக வேண்டும்.

Da URBAN® Merlion Office Chair,High Back Mesh Ergonomic Home Office Desk Chair with 3 Years Warranty, Adjustable Armrests,Adjustable Lumbar Support,Tilt Lock Mechanism
Recommended for You
Da URBAN® Merlion Office Chair,High Back Mesh Ergonomic Home Office Desk Chair with 3 Years Warranty, Adjustable Armrests,Adjustable Lumbar Support,Tilt Lock Mechanism

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க