Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

நைட் தூங்குறதுக்கு முன்னாடி இத மட்டும் செஞ்சா போதும், காலையில எழுந்திருக்கும் போது முகம் ஜொலிக்கும்…

A
Admin User
Journalist
January 13, 2022 5 min read 63 views
நைட் தூங்குறதுக்கு முன்னாடி இத மட்டும் செஞ்சா போதும், காலையில எழுந்திருக்கும் போது முகம் ஜொலிக்கும்…

ரும பராமரிப்பு என்பது பெண்களுக்கு உடன் பிறந்த ஒரு கலை. முகத்தில் சிறு பரு வந்தாலே அதை போக்குவதற்காக படாத பாடுபடுவார்கள். அவர்களுக்காகவே, ஒரு சிறந்த சரும பராமரிப்பு குறிப்புகளை தான் இப்போது கூற போகிறேன். பொதுவாக பகல் வேளைகளில் தான் பெரும்பாலானோர் அழகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். ஆனால், பகலை விட இரவில் செய்யும் சரும பராமரிப்பிற்கான பலன் சற்று அதிகமாகவே கிடைக்கும். இரவில் தான் மாசுக்கள், தூசுக்கள், மனஅழுத்தம் என எதுவும் இருக்காது. மேலும், சரும துளைகள் திறந்து சுவாசிக்கும் நேரம் இரவு என்பதனால் தான் இரவை சிறந்தது என்கின்றனர்.

இளமையை, முகப் பொலிவை எளிமையாக பெற உதவக்கூடிய 3 சுலபமான டிப்ஸ் பற்றி தான் இப்போது கூற போகிறேன். இதை பின்பற்றி உங்கள் அழகை மேலும் கூட்டிக்கொள்ளுங்கள்…

முகத்தை கழுவுவது
முதலில் மிதமான, நச்சுத் தன்மையற்ற இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட க்ளென்சர் கொண்டு முகத்தை கழுவவும். இதன்மூலம், முகத்தில் உள்ள மேக்கப், சரும துளைகளில் சேர்ந்திருக்கும் அழுக்குகள், சரும துளைகள் மற்றும் மேற்பரப்பில் படிந்திருக்கும் எண்ணெய் பசை ஆகியவற்றை நீக்கிடும். எனவே, இரவில் தூங்குவதற்கு முன்பு முகம் கழுவி விட்டு தூங்கினால் அழகான, ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்தை சுலபமாக பெற்றிடலாம்.

சீரம்
எப்போதும், சருமத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டியது அவசியம். எனவே, சீரம் உபயோகிப்பதன் மூலம் சருமம் வறட்சி அடையாமல், சரும செல்கள் அதன் முழு ஆற்றலுடன் செயல்பட பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் சருமத்தை மேலும் துடிப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவதற்காக கிரீம் அல்லது தேன் போன்ற இயற்கை மாய்ஸ்சரைசரை இணைக்கும் விதமான சீரம் ஒன்றைத் தேர்வு செய்திட வேண்டியது மிகவும் முக்கியம்.

நைட் க்ரீம்
சிறந்த ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை பெற்றிய நல்ல நைட் க்ரீம் கொண்டு சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும். சருமத்தின் மந்தமான தன்மையைக் குறைப்பதற்கும், இறந்த செல்களை வெளியேற்றுவதற்கும், கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தை ஒளிரச் செய்வதற்கும் இயற்கையின் நற்குணத்தால் செறிவூட்டப்பட்ட அல்ட்ரா-லைட் கிரீம் ஒன்றைத் தேர்வு செய்திட வேண்டும். இதனால் நீங்கள் காலையில் எழும் போது, அழகான, மிருதுவான, பொலிவான சருமத்தை காண முடியும்.

இரவில் செய்யக்கூடிய சுலபமான இந்த 3 முறைகளை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் சருமத்தில் நீங்களே கண்கூடான மாற்றங்களை காண முடியும். இதுபோன்ற சிறு பராமரிப்பு குறிப்புகளே உங்களது சருமத்தை சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, பொலிவான சருமத்தை பெற்றிடலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க