Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

காளான் ஃப்ரைட் ரைஸ்!!!

A
Admin User
Journalist
December 21, 2021 3 min read 76 views
காளான் ஃப்ரைட் ரைஸ்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு என்றால் ஃப்ரைட் ரைஸ் என்று சொல்லலாம். கடைகளில் செய்யப்படும் ஃப்ரைட் ரைஸ் வாங்கி சாப்பிடுவதை விட ஆரோக்கியமான முறையில், அதுவும் காளானை பயன்படுத்தி ஃப்ரைட் ரைஸ் செய்து கொடுத்தால் அருமையாக இருக்கும் அல்லவா? இதற்கு எந்தவொரு சைடு டிஷ்ஷூம் தேவைப்படாது. வாருங்கள் இப்போது காளான் ஃப்ரைட் ரைஸ் செய்முறையை பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 3 கப் (வேக வைத்தது)

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 6 (பாடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியான நறுக்கியது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

காளான் – 1 கப் (நீளமாக நறுக்கியது)

உப்பு – சுவைக்கேற்ப

சர்க்கரை – 1 டீஸ்பூன்

சோயா சாஸ் – 2 டீஸ்பூன்

வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்

கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

*அரிசியை முதலில் நன்கு கழுவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்பு, அதனை தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி 90 சதவிகிதம் வெந்தால் போதுமானது. சாதத்தை நன்கு ஆற வைத்து உதிரி உதிரியாக இருக்கும் படி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

*அடுத்ததாக நறுக்கிய வைத்துள்ள காளானை சேர்த்து 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.

*காளான் வெந்தவுடன் அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

*பின்பு, வேக வைத்து எடுத்த அரிசியை சேர்த்து கலக்கவும்.

*இறுதியாக, சோயா சாஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி இறக்கினால் சுவையான காளான் ஃப்ரைட் ரைஸ் தயார்…

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க