Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

மாத ராசிபலன் (மார்ச் 2022) : இந்த 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கப்போகிறது...

A
Admin User
Journalist
March 02, 2022 1 min read 18 views
மாத ராசிபலன் (மார்ச் 2022) : இந்த 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கப்போகிறது...

மார்கழி மாதம் ஆரம்பமாகிவிட்டது. இந்த மார்ச் மாதத்தில், மகாசிவராத்திரி முதல் ஹோலி பண்டிகை வரை பல பெரிய பண்டிகைகள் வரும். ஒவ்வொரு நாளும் மாறும் கிரக நிலைகள் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம், சில ராசிக்காரர்களிளுக்கு கடினமான காலமாக இருக்கும். மார்ச் 2022-ல் உங்கள் ராசிக்கான பலனை இப்போது தெரிந்து கொள்வோம்…

மேஷம்

மார்ச் மாதம் உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்த காலமாக இருக்கும். ஆனால் மனதில் சில இனம் புரியாத பயம் இருக்கக்கூடும். மாதத் தொடக்கத்தில் வியாபாரிகளுக்கு திருப்திகரமாக இருந்தாலும் கடின உழைப்பும் அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் படிப்பில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆனால், மார்ச் 14ம் தேதிக்குப் பிறகு, சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வருமானமும் அதிகரிக்கலாம்.

ரிஷபம்

வியாபாரிகளுக்கு கடுமையான உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க போகிறது. அதற்காக அலட்சியமாக இருந்துவிட கூடாது. தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். ரிஷப ராசி மாணவர்கள் இந்த காலக்கட்டத்தில் தங்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. அலுவலக வேலைகளில் உத்தியோகஸ்தர்களுக்கு பெரும் பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கூட கிடைக்கக்கூடும். இருந்தாலும், ஆவணத்தைத் தவிர்த்து அனைவரையும் ஒரே மாதிரி நடத்த அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கைப் பற்றி பேசினால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் குடும்பத்தில் மகிழச்சியும், அமையும் நிலைத்திருக்கும்.

மிதுனம்

மார்ச் மாதத் தொடக்கத்தில் உங்கள் மனம் அமைதியற்று இருக்கும். நம்பிக்கையும் குறையக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் நல்லுறவு இருக்கும். ஆனால், அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாக, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் குழப்பமான சூழல் நிலவும். மேலும், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வாகனப் பராமரிப்புக்கான செலவுகள் அதிகரிக்கக்கூடும். மார்ச் 7ம் தேதி முதல் உங்கள் தன்னம்பிக்கை படிபடியாக அதிகரிக்கும்.

கடகம்

மாத தொடக்கத்தில் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கை மிகுதியாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாதத் தொடக்கத்தில் வியாபாரிகளுக்கு தொழில் நிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆனால், மார்ச் 7ம் தேதி முதல் சில சிரமங்கள் ஏற்படலாம். மார்ச் 27க்குப் பிறகு மீண்டும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் உள்ளது. மாணவர்கள் இந்த மாதம் படிப்பில் கூடுதல் கவனமாக இருக்க வேண்யடிது அவசியம்.

சிம்மம்

மார்ச் மாதம் 14ம் தேதி வரை நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். அதன் பிறகு பொறுமை குறையலாம். அத்தகைய சூழலில் உங்கள் பேச்சில் சமநிலையைப் பேணுங்கள். மார்ச் 7ம் தேதிக்கு பிறகு தொழில் நிலை மேம்படும். லாப அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆனால் மாத இறுதியில் மீண்டும் சில பிரச்சனைகள் தலை தூக்கலாம். வேலை தேடி அலைபவர்களுக்கு, பழைய நண்பரின் உதவியால் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதற்காக குடியிருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

கன்னி

மார்ச் மாத தொடக்கத்தில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கையும் அதிகரிக்கும். மார்ச் 7க்கு பிறகு தன்னம்பிக்கை குறைவதை உணரலாம். மார்ச் 15ம் தேதி முதல் மன அமைதி காக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறலாம். உங்களுக்கு இனிப்புகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் காணப்படும். ஆனால் அலவலகத்தில் இடமாற்றமும் செய்யப்படலாம். இதனால், குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

துலாம்

மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். உங்களுக்கு, இசையின் மீதான ஆர்வம் திடீரென அதிகரிக்கக்கூடும். மாணவர்கள் சமீபத்தில் எழுதிய தேர்வில் வெற்றி பெறுவார்கள். மார்ச் 14ம் தேதி வரை வருமான நிலை போதுமானதாக இருக்கும். அதன்பின் வருமானம் குறையலாம். இதனால், செலவுகளும் அதிகரிக்கக்கூடும். இருந்தாலும், சிக்கனமாக இருந்தால் நல்ல நிலையில் இருக்கலாம். வணிகர்கள் புதிய வணிகச் சலுகையைப் பெறலாம். புதிய சொத்துகள் வாங்கலாம். இந்த காலக்கட்டத்தில், தந்தையின் உடல்நிலையில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.

விருச்சிகம்

இந்த காலத்தில் மனம் அமைதியற்றதாக இருக்கும். வியாபாரிகளுக்கு தொழில் நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால், கடின உழைப்பும் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் குழப்பமானதாக இருக்கலாம். மார்ச் 15ம் தேதி முதல் பொறுமையை கைபிடியுங்கள். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டோருக்கு வெற்றி கிட்டும். வேலை சம்பந்தமான சுற்றுலா செல்லலாம்.

தனுசு

கல்வி மற்றும் அறிவுசார் வேலைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆனால், சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். மன அமைதிக்காக பாடுபடுங்கள். மார்ச் 7ம் தேதி முதல் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பு அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும். வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும். ஆனால் அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தை விட்டும் விலகி இருக்க வேண்டியிருக்கும்.

மகரம்

இந்த காலக்கட்டத்தில் மன அமைதியை உணர்வீர்கள். உங்களிடையே தன்னம்பிக்கை மிகுதியாக இருக்கும். உங்கள் பேச்சு திறனை சமநிலையுடன் வைத்திருங்கள். மார்ச் 7ம் தேதி முதல் உங்கள் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். நண்பரின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாப நல்ல வாய்ப்புகள் தேடி வரலாம். மார்ச் 14ம் தேதிக்கு பிறகு கடின உழைப்பு அதிகமாகும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். புதிய வருமான ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்

மனதில் வீண் குழப்பம் ஏற்படலாம். மன அமைதிக்காக நிறைய போராட வேண்டியிருக்கும். மார்ச் 7ம் தேதிக்கு பிறகு தொழில் நிலை மேம்படும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறலாம். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கக்கூடும். ஆனால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய காலமிது. உங்கள், வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வாகனப் பராமரிப்புக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும். பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

மீனம்

இந்த மாதம் உங்கள் தன்னம்பிக்கை குறைந்ததாக நீங்கள் உணரலாம். மார்ச் 7ம் தேதி முதல் உங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். அலட்சயத்தால் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மார்ச் 15ம் தேதி முதல் உங்கள் பொறுமை குறையலாம். குடும்பத்தின் அமைதிக்காக பாடுபடுவீர்கள். பழைய நண்பரின் திடீர் சந்திப்பு கிட்டும். முன்னோர் சொத்துகளை விற்பதன் மூலம் புதிய வருமான ஆதாரத்தைப் பெற முடியும். வீட்டு பராமரிப்பு மற்றும் அலங்காரச் செலவுகள் அதிகரிக்கும். சகோதரிகள் அல்லது சகோதரர்களிடமிருந்து எதிர்பாராத பரிசுகளைப் பெறலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

ZEBRONICS MAX LINK Wireless Gamepad, Dual motors Haptic feedback, Built-in rechargeable battery, RGB light, Plug & play, Supports (Windows | Android)
Recommended for You
ZEBRONICS MAX LINK Wireless Gamepad, Dual motors Haptic feedback, Built-in rechargeable battery, RGB light, Plug & play, Supports (Windows | Android)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க