Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

கும்பத்தில் அஸ்தமனமாகும் புதனால் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

A
Admin User
Journalist
March 18, 2022 5 min read 50 views
கும்பத்தில் அஸ்தமனமாகும் புதனால் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிலும், ஜோதிடத்தில் புதன் பகவான் தனி இடத்தைப் பெற்றுள்ளார். இந்த சூழலில், புதன் இன்று கும்ப ராசியின் அஸ்தமனம் ஆகிறார். இது ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலனைத் தரும். கிரகங்கள் அஸ்தமனமானால் நற்பலன்களை விட கெடு பலன்களே அதிகம் கிடைக்கும் என்பார்கள். அந்த வகையில், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனம் சற்று கடினமாக காலமாக இருக்கப் போகிறது. எனவே, இந்த 4 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அந்த 4 ராசிக்காரர்கள் யார் என்பதை இப்போது பார்க்கலாம்…

ரிஷபம்

மன அமைதியைப் பெற தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். திடீர் நிதி இழப்பிற்கும் வாய்ப்புள்ளது. இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டியது அவசியம். உங்கள் வாழ்க்கையில் நிலைமைகள் வேதனை நிறைந்ததாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறிது நேரமாவது செலவிட முயற்சிக்கவும். இல்லையெனில் உங்களிடையே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்தவொரு விஷயத்திலும், வெளியாரை கண்மூடித்தனமாக நம்பி விட வேண்டாம்.

கடகம்

புதன் அஸ்தமனம் இந்த காலக்கட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை குறையக்கூடும். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உத்தியோகஸ்தர்கள் வேலை சம்பந்தமான விஷயங்களில் வெளி நபர்களை நம்ப வேண்டாம். உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். பிறரை சார்ந்திராமல் சுயமாக யோசித்து செயல்படுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தில் பண பரிவர்த்தனைகள் செய்ய வேண்டாம். முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் சாதகமாக இல்லை. நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்

புதன் அஸ்தமிக்கும் இந்த காலக்கட்டத்தில் உங்கள் மனம் சஞ்சலத்துடனேயே இருக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கொடுக்கல் வாங்கல்களுக்கு நேரம் சாதகமாக இல்லை. இதனால், நிதி இழப்பும் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயற்சியுங்கள். வீண் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.

விருச்சிகம்

செய்யும் வேலையில் அதிருப்தியான தருணங்கள் உங்கள் மனதில் இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க