Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

செவ்வாயின் ராசி மாற்றத்தால் ஏப்ரல் 7 முதல் இவர்களுக்கு வெற்றி காலம் தான்...

A
Admin User
Journalist
March 31, 2022 1 min read 17 views
செவ்வாயின் ராசி மாற்றத்தால் ஏப்ரல் 7 முதல் இவர்களுக்கு வெற்றி காலம் தான்...

கிரகங்களின் தளபதி என்றழைக்கப்படும் செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் 7ம் தேதி கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார். கும்ப ராசிக்கு ஏப்ரலில் வரும் செவ்வாய், மே மாதம் 17ம் தேதி வரை இந்த ராசியிலேயே இருப்பார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, பலன் மற்றும் தைரியத்திற்கான அதிபதியாக செவ்வாய், சனி பகவானின் ராசியான கும்பத்திற்கு செல்வது பல ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வாரி வழங்க போகிறது. அந்த வகையில், கும்ப ராசிக்கு செல்லும் செவ்வாயால் பலனடையப் போகும் 5 ராசிக்காரர்களைப் பற்றி இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதைப் முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் நல்ல தொடக்கமாக அமையபோகிறது. இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் பெரிய வாய்ப்புகளைப் பெறலாம். இந்த பெயர்ச்சி காலம் புதிய முதலீடு செய்ய உகந்த காலமாக இருக்கும். இருப்பினும், இந்த காலக்கட்டத்தில் உங்கள் உறவுகளுக்கிடையே சில பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். செவ்வாய் பெயர்ச்சி ஆகும் இந்த காலத்தில் உங்கள் பேச்சில் நிதானம் இருக்க வேண்டும்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள், கும்பத்தில் சஞ்சரிக்க போகும் செவ்வாயால் மகத்தான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். இதனுடன் திடீர் நிதி ஆதாயமும் அதிகரிக்கக்கூடும். உங்கள் வருமானம் உயரும். நிதி சார்ந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரும். இதனால், மன நிம்மதி மேலோங்கும்.

மிதுனம்
செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும். வியாபாரிகளுக்கு இந்த பெயர்ச்சி காலம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நிலம் மற்றும் வாகனத்தில் முதலீடு செய்யலாம். இருப்பினும், எந்தவொரு முதலீடு செய்வதற்கு முன்பும் உங்கள் நலம் விரும்பிகளிடம் ஆலோசனைப் பெற வேண்டியது அவசியம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய் சஞ்சாரத்தின் போது உடன்பிறந்தோரின் முழு ஆதரவையும் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை ஏற்படும். திடீர் பண வரவுகள் உங்கள் நிதி நிலைமை மேலோங்க செய்யும். அதுதவிர, செவ்வாய்ப் பெயர்ச்சியாகும் காலக்கட்டத்தில் தடைப்பட்ட வேலைகளில் பல முடிவடையும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் செவ்வாய் சஞ்சாரத்தின் போது வேலை மற்றும் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தைப் பெறலாம். இருப்பினும், இந்த நேரத்தில் இடம் மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. செவ்வாய்ப் பெயர்ச்சி காலத்தில் எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் முன்கூட்டியே யோசித்து செயல்படுவது சரியாக இருக்கும். அவசரமாக எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள்.

VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women
Recommended for You
VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க