Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

13ம் தேதி அஸ்தமனமாகும் புதனால் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

A
Admin User
Journalist
May 12, 2022 1 min read 35 views
13ம் தேதி அஸ்தமனமாகும் புதனால் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மே 13-ம் தேதி புதன் அஸ்தமனமாகப் போகிறார். புதனின் இந்த அமைப்பால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கக்கூடும். புத பகவான் புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, கணிதம், புத்திகூர்மை மற்றும் நட்பு ஆகியவற்றிற்கான கிரகமாக கருதப்படுகிறார். ஒரு ராசியை மாற்றுவதற்கு முன்பு கிகரங்கள் அஸ்தமனம் ஆவதும், அதன் பின்னர் உதயமாவதும் சாதாரணமாக நிகழ்வது. எனவே, புதனின் ராசி மாற்றத்தால் 12 ராசிகளின் நிலை எப்படி இருக்க போகிறது என்பதை இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்வோம்…

மேஷம்
இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு மன அமைதி இருக்கும். இருப்பினும், உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. தொழில் நிமித்தமான திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இந்த பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் வாழ்க்தைக் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

ரிஷபம்
புதன் அஸ்தமனம் ஆகும் இந்த நேரத்தில் உங்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் இந்த நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், இப்போது உங்கள் உடல்நலனில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

மிதுனம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய காலமிது. மேலும், இந்த காலக்கட்டத்தில் நண்பரின் உதவியால் நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்டலாம். மாணவர்கள் உயர்கல்வி பெற முயற்சித்தால், நீங்கள் வேறு இடத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்கள் மீதான பணி சுமை கணிசமாக அதிகரிக்கும். மேலும், குடும்பத்தாரின் சந்தோஷத்திற்காக கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். சேமிப்பு கரையவும் வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் தங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும், மனதில் எதிர்மறை உணர்வுகள் நிறைந்திருக்கும். பாதகமான சூழ்நிலைகளின் போது குடும்பத்தினரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கடவுள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மேலும், குடும்பத்தோடு வழிபாட்டு தலத்திற்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

கன்னி
இந்த நேரத்தில் அதிகரிக்கும் குடும்பப் பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். இதுபோன்ற நேரங்களில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதோடு, வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சமூகத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து, பிறருக்கு உதவ முன்வருவீர்கள். புதனின் அஸ்தமனம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால், கூடுதல் அக்கறை காட்டுங்கள்.

துலாம்
இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் மனம் தேவையில்லாமல் கலங்கலாம். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் மன அமைதிக்காக பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் பற்றி கவலை எதுவும் இருக்காது.

விருச்சிகம்
இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். இக்கட்டான சூழலில் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றத்திற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். தந்தையின் மூலம் நிதி ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

தனுசு
இந்த காலக்கட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வணிகர்களுக்கு வியாபாரத்தில் நிறைய சிரமங்கள் வரக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பரின் ஆதரவால் சுலபமாக வெளி வந்துடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் இந்த நேரத்தில் அதிகமாக அலைய வேண்டியிருக்கும். இதனால், உடற்சோர்வும், மனசோர்வும் உண்டாக வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் மனம் அமைதியற்று இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வழிபாட்டு பணிகளில் ஈடுபாடு கூடும். குடும்பத்தின் பெரியவர்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். இந்த நேரத்தில் தக்க தருணத்தில் உங்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்க பெறுவீர்கள். ஆடை அலங்காரத்திற்கான செலவுகள் அதிகரிக்கக்கூடும். மாணவர்களுக்கு சமீபத்தில் எழுதிய தேர்வில் நல்ல வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

மீனம்
மீன ராசி மாணவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில கல்வியில் திடீரென ஆர்வம் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடைகள் மீதான ஆசையால் அளவிற்கு மீறி செலவுகள் அதிகரிக்கலாம். வணிகர்களுக்கு வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த நேரத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கலாம்.

HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)
Recommended for You
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க