Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

கோடையில் வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட சொல்வதற்கான காரணம் தெரியுமா?

A
Admin User
Journalist
April 29, 2022 1 min read 23 views
கோடையில் வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட சொல்வதற்கான காரணம் தெரியுமா?

ஒவ்வொருவரும் கோடைகாலத்தில் தங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க விரும்புகிறார்கள். விரும்புவது என்ன நம் உடலே அதிகப்படியான வெயிலால் நீரை அதிகமான அருந்த தூண்டிவிடும். இது மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டால், அது அந்த காலத்திற்கு ஏற்ப நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோடைகால பட்டியலில் வெள்ளரிக்காயும் இடம்பெற்றுள்ளது. மக்கள் பொதுவாக வெள்ளரிக்காயை சாலட்களில் பயன்படுத்துகின்றனர். உண்மையில், வெள்ளரி என்பது மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது. வெள்ளரிக்காயில் 90 சதவீத நீர் உள்ளது. இது உடல் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தவிர, வெள்ளரிக்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற பல கூறுகள் உள்ளன. அவை வெப்பத்தில் உள்ள பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். வெள்ளரிக்காய் நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இப்போது இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்வோம்…

கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்
வெள்ளரிக்காயில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. ஆம், வெள்ளரிக்காயை வழக்கமாக உட்கொள்வது உடலில் உள்ள நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் உதவுகிறது.

எடையைக் குறைக்க உதவும்
வெள்ளரிக்காயில் மிகக் குறைவான அளவில் கலோரிகள் இருப்பதால், அதை அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்காது. இதுமட்டுமின்றி, இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, அடிக்கடி உண்டாகும் பசி உணர்வைத் தவிர்க்கும்.

கொழுப்பைக் கட்டுப்படுத்தும்
வெள்ளரிக்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரிகள் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை அது சீராக பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள ஸ்டெரால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரிக்கவும் உதவுகிறது.

சருமத்திற்கும் கூந்தலுக்கும் சிறந்தது
வெள்ளரிக்காயை உட்கொள்வதன் மூலம், நமது சருமம் மற்றும் கூந்தலும் அழகாக இருக்கும். அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதனை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும், சரும கறைகளும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மறைந்திடும்.

எலும்புகளை வலுவாக்கும்

வெள்ளரிக்காய் சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்துகிறது. மேலும், அதில் உள்ள வைட்டமின்-கே எலும்பின் தேய்மானத்தை தவிர்த்து, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கிறது.

மலச்சிக்கலை நீக்கும்
வெள்ளரிக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. எனவே, வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் வாயு பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுத்திடும்.

VESCO Kick Pro 16T Kids Cycle with Side Wheels | Rigid Suspension | 11 Inches Frame | Ideal for 4 to 6 Years Boys & Girls Kids Bike (Orange)
Recommended for You
VESCO Kick Pro 16T Kids Cycle with Side Wheels | Rigid Suspension | 11 Inches Frame | Ideal for 4 to 6 Years Boys & Girls Kids Bike (Orange)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க