Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

கசப்பான பாகற்காயில் இத்தனை நன்மைகள் இருக்குனு உங்களுக்கு தெரியுமா...

A
Admin User
Journalist
July 05, 2022 1 min read 50 views
கசப்பான பாகற்காயில் இத்தனை நன்மைகள் இருக்குனு உங்களுக்கு தெரியுமா...

காய்கறிகளில் கசப்பான காய் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒரே காய் பாகற்காய் தான். பாகற்காய் கசப்பு பலருக்கும் பிடிக்காத ஒன்றாகவே உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட பாகற்காயைச் சாப்பிடுவது உங்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். எவரொருவர் பாகற்காயை விரும்பி சாப்பிடுகிறார்களோ அவர்கள் பல பிரச்சனைகளில் இருந்து தங்களை காத்து கொள்வர். ஏனென்றால், பாகற்காய் சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. பாகற்காய் சுவையில் கசப்பானதே தவிர, அதனால் கிடைக்கும் நன்மைகள் அனைத்துமே இனிமையானவை. சிலர் பாகற்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். பிறர் கூறும் கசப்பான அறிவுரை கேட்பதற்கு புடிக்காவிட்டாலும், அதனால் நமக்கு எப்படி நன்மை கிடைக்கிறதோ, அதே போல் தான், பாகற்காய் சாப்பிட மட்டுமே கசப்பானதே தவிர, அது நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பாகற்காய் நன்மைகள் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

பாகற்காயில் உள்ள சத்துகள்

பாகற்காயில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

சரும வறட்சி முதல் கருவளையம் வரை அனைத்தையும் சரி செய்ய இது ஒன்று போதும்…

சீரான செரிமானம்

பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வதால், நம் உடலின் செரிமான அமைப்பு சீராகும். நாம் உண்ணும் உணவை சுலபமாக ஜீரணிக்க உதவுகிறது. எனவே, ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பாகற்காய் சாப்பிட வேண்டும்.

உடல் பருமன்

உடல் பருமனைக் குறைப்பதிலும் பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பாகற்காயில் குறைந்த கலோரியும், நிறைந்த நார்ச்சத்தும் உள்ளது. இதன் காரணமாக, பாகற்காயை நாம் சாப்பிடும் போது உடல் எடையைக் குறைக்க உதவிடும்.

புற்றுநோய்

புற்று நோயைக் குறைக்கும் பண்புகள் பாகற்காயில் உள்ளது. புற்றுநோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பாகற்காய் பயன்படுத்தலாம்.

அதிகப்படியான மனஅழுத்தத்தைப் போக்க உதவும் ஜோதிட வழிமுறைகள்…

கண் பார்வை

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பாகற்காயை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால், பாகற்காய் கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு

பாகற்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதன் காரணமாக, அழற்சி பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் பாகற்காயை சேர்த்து கொண்டால் உடலில் உண்டாகும் அழற்சியின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்

பாகற்காய் கசப்பானது தான். ஆனால், அதனை நம் உணவில் தொடர்ந்து சேர்த்து கொள்வதன் மூலம் இரத்தத்தை சுத்தப்படுத்திட உதவும். இதனால் பல்வேறு பிரச்சனைகளையும் தடுத்திடலாம்.

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
Recommended for You
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க