Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

கேட்ட வரம் அருளும் தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமண சுவாமி கோயில்!!!

A
Admin User
Journalist
December 18, 2021 3 min read 94 views
கேட்ட வரம் அருளும் தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமண சுவாமி கோயில்!!!

தான்தோன்றிமலை கல்யாணவெங்கடரமண சுவாமி திருக்கோயில் கரூர் மாவட்டத்தில் இருந்து தெற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும். பெருமாள் இங்கு சுயம்பு மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் செருப்பை காணிக்கையாக செலுத்துகின்றனர். பெருமாளே செருப்பு தைக்கும் இனத்து பெரியவர்கள் கனவில் வந்து குறிப்பிட்ட அளவுள்ள செருப்பை செய்து தர சொல்லி கேட்டதால், இங்க செம்மாலி சமர்ப்பணம் எனும் செருப்பை பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தும் நிகழ்வு மிக விஷேசமாக நடைபெறும். அந்த இனத்து மக்கள் பெருமாள் கேட்ட செருப்பை செய்து கோமாளி வேடம் அணிந்து கொண்டு வந்து பெருமாளுக்கு படைக்கின்றனர்.

சுசர்மா எனும் பக்தன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதிக்கு செல்லும் வழியில் காவிரி நதிகரையில தங்கி இருந்தார். அப்போது அவருடைய கனவில் வந்த நாரதர், சுசர்மைவை திருமுக்கூடலூருக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். அங்கு அவரை தச்சர்கள் சிலர் வரவேற்று கல் வேலை நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு திடீரென்று மலை மேல இருந்து பிரகாசமான ஒளி வந்தது. அதன்பிறகு பாறை இரண்டாக பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அளித்தார். இப்படி தான் இங்கு பெருமாள் எழுந்திருளினார். அது தவிர, ஆதி சேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதி தான் தான்தோன்றிமலை என்றும் கூறப்படுகிறது.

இந்த பெருமாைளை வேண்டினால் திருமண பாக்கியம், புத்திர பேரு கிடைக்கும் என்றும் வேண்டுதல் நிறைவேறியவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், உடம்பு சம்பந்தப்பட்ட எந்த வியாதியாக இருந்தாலும், பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் குணம் அடையுமாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க