Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

கர்ப்ப காலத்தில் வெல்லம் சாப்பிடுவது குழந்தைக்கு ரொம்ப நல்லதாம்...

A
Admin User
Journalist
March 03, 2022 4 min read 54 views
கர்ப்ப காலத்தில் வெல்லம் சாப்பிடுவது குழந்தைக்கு ரொம்ப நல்லதாம்...

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, ​​பெரும்பாலான மருத்துவர்கள் சர்க்கரை உணவுகளை தவிர்க்கச் சொல்வதுண்டு. குறிப்பாக சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படும். ஏனெனில், சர்க்கரையில் பல இரசாயன கூறுகள் உள்ளன. சர்க்கரை உடல் பருமனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், கர்ப்ப காலத்தில் உங்களுக்கு இனிப்பு சாப்பிட விரும்பினால், சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்தலாம். ஆம், வெல்லம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தின் மீது எந்த மோசமான விளைவையும் ஏற்படுத்தாது. அது மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் சாப்பிடக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த சூப்பர்ஃபுட் இது. கர்ப்ப காலத்தில் வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குகிறது. கர்ப்ப காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் உங்களுக்கு சொல்ல போகிறோம்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

வெல்லத்தில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில், இது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெல்லம் சாப்பிடுவதால் தொற்று நோய் வராமல் தடுத்திடலாம்.

குழந்தையின் எலும்புகளை வலுவாக்கும்

வெல்லத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால், வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்புகள் வலுவடையும்.

வீக்கத்தைக் குறைக்கும்

வெல்லத்தில் பொட்டாசியம் என்ற தாதுக்கள் இருப்பதால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. உண்மையில், பொட்டாசியம் காரணமாக, உடலில் எலக்ட்ரோலைட் அளவு சமநிலையில் இருக்கும். எனவே, இது கர்ப்ப காலத்தில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.

செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மலச்சிக்கல், வாயு பிரச்சனை போன்றவை ஏற்படுவது இயல்பு தான். இதற்கு காரணம் வயிற்றில் வளரும் குழந்தையால் வயிற்று உள்ளுறுப்புகளுக்கான இடம் குறையத் தொடங்குவதே இதற்கு காரணம். அத்தகைய சூழ்நிலையில், வெல்லம் சாப்பிடுவது செரிமான அமைப்பை சிறப்பாக வைத்திருக்க உதவிடும். எனவே, உங்களுக்கு இனிப்பு சாப்பிட தோன்றினால் சர்க்கரையைத் தவிர்த்து வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க