குழந்தை போன்ற மென்மையான சருமம் வேண்டும் என்பதே பெண்கள் அனைவரின் விருப்பமாக இருக்கும். மென்மையாக சருமத்தைப் பெற நிறைய செலவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. சருமம் மென்மையாக இருப்பதும், இல்லாமல் இருப்பதும் நம் வாழ்க்கை முறையைப் பொருத்தது. எனவே, உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே மென்மையான பிறர் பொறாமைப்பட கூடிய சருமத்தை நிச்சயம் பெற்றிடலாம். வயதாவதைத் தவிர, பிற தவறான செயல்கள் கூட உங்கள் சருமத்தை கெடுக்கக்கூடும். எனவே, உங்கள் சருமத்தை மிருதுவானதாக மாற்ற 5 விஷயங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள். இனி, மென்மையான, மிருதுவான சருமத்தைப் பெற வேண்டுமென்ற ஆசை வந்தால் முதலில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 விஷயங்களை தினந்தோறும் முறையாக பின்பற்றுகிறீர்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சரி, இப்போது அதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம்…

சி.டி.எம் (CTM)
சி.டி.எம் என்பது க்னென்சிங், டோனிங் மற்றும் மாஸ்சரைசர் ஆகியவற்றை குறிக்கிறது. ஆரோக்கியமான சருத்தைப் பெற முதலில் இவற்றை தினந்தோறும் தவறாமல் செய்து வர வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி, சருமத்திற்கு போதிய அளவு ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்று சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையிலான ஈரப்பதமூட்டும் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.

ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான உணவுகளை உண்பது ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கான அடிப்படை. நாம் உண்ணும் உணவு நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கான ஊட்டத்தை வழங்குகிறது. அதேபோல், உண்ணும் உணவில் நமது சருமத்தின் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து விஷயங்களும் அடங்கியுள்ளன. உணவில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் ஆகியவை கொலாஜன் உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான செல் சவ்வுகளை ஆதரிக்கின்றன. மேலும் புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாடு போன்ற தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்தும் சருமத்தைப் பாதுகாத்திடும்.

அடிக்கடி சிரிக்கவும்
நாம் சிரிக்கும்போது கண்கள் சுருங்கி, கண்களுக்கு கீழே கோடுகள் விழும் என்பதாலேயே பெரும்பாலானோர் அதை செய்ய வெறுக்கின்றனர். ஆனால், ஒரு சாதாரண புன்னகையின் பின்னால் பல்வேறு நன்மைகளை மறைந்திருப்பதை நாம் அரிதாகவே உணர்கிறோம். நாம் சிரிக்கும் போது இரத்த ஓட்டம் சீராகும். இதனால், சருமம் அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது. இது ஒரு ஆரோக்கியமான சருமத்தை மாற்றியமைக்க உதவுகிறது. மேலும் இது உங்களுக்கு மன அழுத்தம் இல்லாமல், உங்களை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் மாற்றிடும்.

நிறைய தண்ணீர் குடிப்பது
நமது உடலில் 70% தண்ணீர் இருப்பதால், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதே உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும் மிக எளிதான வழியாகும். போதுமான தண்ணீர் குடிப்பது, நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும், முகப்பருகள் ஏற்படாமலும் தடுத்து, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையையும் அதிகரித்திடும். இதனாலேயே, நீர் நம் வாழ்விற்கான அமுதம் என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.

தினசரி உடற்பயிற்சி
சுத்திகரிப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்துடன், மகிழ்ச்சியான சருமத்திற்கு முக்கியமான மற்றொரு அம்சம் உடலியக்கம். நாம் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்போது, உடல் எண்டோர்பின்கள் எனப்படும் இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. இந்த எண்டோர்பின்கள் மூளையில் உள்ள செல்களுக்கு தொடர்பு கொண்டு நேர்மறை உணர்வுகளையும் மகிழ்ச்சியான எண்ணங்களையும் தூண்டுகின்றன. மாசுபாடற்ற சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியின் இந்த உணர்வு அவர்களது சருமத்தில் பிரதிபலிக்கிறது. இதனால் உங்கள் மனநிலையை முற்றிலும் மாற்றி, உங்களையும் உங்கள் சருமத்தையும் பளபளப்பாக வைத்திருக்கும் சக்தியைப் பெறுகிறது. எனவே, உங்கள் சருமத்தை மிருதுவாக மாற்ற விரும்பினால் தினந்தோறும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய பழகுங்கள்.