Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

தீயில் சுட்ட வெங்காயம் சாப்பிடுறதுல இவ்ளோ நன்மைகளா? அப்ப உடனே சாப்பிட வேண்டியது தான்...

A
Admin User
Journalist
May 02, 2022 5 min read 55 views
தீயில் சுட்ட வெங்காயம் சாப்பிடுறதுல இவ்ளோ நன்மைகளா? அப்ப உடனே சாப்பிட வேண்டியது தான்...

வெங்காயம் யாருக்கு தான் பிடிக்காது. பலர் அதை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதை கூட விரும்புவதுண்டு. அத்தகைய சூழ்நிலையில், வெங்காயம் உஷ்ணமான நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. வெங்காயம் என்பது உணவின் சுவை இரட்டிப்பாக மாற்றிடும். அத்தகைய வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. இது தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பு வரை அனைத்திற்கும் சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால், இதை எப்படி பயன்படுத்தினால் சிறந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. பொதுவாகவே, வெங்காயம் சிறந்த மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளது. ஆனால், அந்த வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால், இன்னும் நன்மைகள் பல மடங்காக அதிகரித்திடும். சரி, வெங்காயத்தை வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்…

உடலில் உள்ள நச்சுகளை அகற்றிடும்

இப்போதெல்லாம் மக்கள் நாவிற்கு சுவையான துரித உணவுகளை அதிகமாக விரும்பி உட்கொள்ளத் தொடங்கிவிட்டனர். சிலர், தினந்தோறும் இதுபோன்ற உணவுகளை சாப்பிடும் பழக்கமும் கொண்டுள்ளனர். ஆனால், இதன் காரணமாக, உடலில் நச்சுகள் அதிக அளவில் சேர்கிறது என்பது உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும். சுவையை அதிகரிக்க செய்ய பல ரசாயனக் கலவைகளை துரித உணவுகளில் பயன்படுத்துகின்றனர். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்களது உடல் நச்சுக்களில் இருப்பிடமாக மாறக்கூடும். எனவே, உடலில் சேரக்கூடிய நச்சுக்களை அவ்வபோது அகற்றுவது மிக மிக அவசியம். அதற்கு, நீங்கள் சுட்ட வெங்காயத்தை சாப்பிடலாம். தீயில் சுட்டெடுத்த வெங்காயம் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றிட உதவும்.

வீக்கத்தைக் குறைக்கும்

உடலில் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைக்க, வறுத்த வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அழற்சி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் வழங்குவதில் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், அதை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். எதையும் அளவாக சாப்பிட்டால் மட்டும் தான் நன்மை பயக்கும்.

செரிமானத்தை சீராக்கும்

செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலில் நார்ச்சத்து போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு நார்ச்த்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உணவு தான் நெருப்பில் சுட்டெடுத்த வெங்காயம். இதில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் முதல் அஜீரணம் வரை அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.

எலும்புகளை வலுவாக்கும்

வறுத்த வெங்காயத்தின் கால்சியம் நிறைந்துள்ளது. அதனால்தான் இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இது எலும்புகளை மட்டுமல்ல, பற்களையும் வலிமையாக்குகிறது. எனவே, எலும்பு தேய்மான பிரச்சனை, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டு பாருங்கள், நிவாரணம் கிடைப்பதை நீங்களே உணரலாம். பற்களை வலுவாக வைத்து கொள்ளவும் இந்த வெங்காயத்தை தாராளமாக சாப்பிடலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க