Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

வாழைப்பூ கசாயம்: செரிமானம் முதல் நீரிழிவு நோய் வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு...

A
Admin User
Journalist
March 15, 2022 1 min read 22 views
வாழைப்பூ கசாயம்: செரிமானம் முதல் நீரிழிவு நோய் வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு...

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களைப் பற்றி அனைவருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். வாழைப்பழத்தைப் போலவே வாழைப்பூவிலும் ஏகப்பட்ட சத்துகள் மறைந்திருக்கின்றன. வாழைப்பூவில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் என அடுக்கி் கொண்டே போகலாம். இது ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். அதே நேரத்தில், ஆயுர்வேதத்தில் வாழைப்பூ மருந்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஹேர் சீரம், ஃபேஸ் ஆயில், க்ரீம் மற்றும் ஸ்கரப் தயாரிக்கவும் வாழைப்பூ பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, வாழைப்பூவில் இருந்து பல்வேறு உணவு வகைகளும் தயாரிக்கலாம். நீங்கள் வாழைப்பூவை வைத்து பொரியல், வடை போன்றவை செய் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், வாழைப்பூவில் கசாயம் செய்து குடித்ததுண்டா? இந்த கசாயம் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடும். அதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

வாழைப்பூ கசாயம் செய்வது எப்படி?

முதலில் வாழைப்பூவை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிடவும். இப்போது, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். பின்னர், அந்த நீரை வடிகட்டி நன்கு ஆறியதும் அதில் அரை டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கவும். இப்போது வாழைப்பூ கசாயம் தயார்.

ஃப்ரீ-ரேடிக்கல் பாதிப்பைக் குறைக்கும்

வாழைப்பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்திருப்பதால் ஃப்ரீ-ரேடிக்கல்களைக் குறைக்க உதவுகின்றன. அதுமட்டுமின்றி, வாழைப்பூவிலிருந்து தயாரிக்கப்படும் கசாயத்தைக் குடித்து வந்தால் புற்றுநோயின் அறிகுறிகளைக் குறைப்பதோடு, வயதான தோற்றம் விரைவில் ஏற்படாமல் தடுக்கவும் உதவிடும்.

கர்ப்பப்பையின் ஆரோக்கியம்

வாழைப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் கசாயத்தை உட்கொள்வதால் கருப்பையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இந்த கசாயத்தை செய்ய வாழைப்பூவுடன் சிறிது மஞ்சள் தூள், சீரகத்தூள், கருமிளகு தூள் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

செரிமானம்

வாழைப்பூவில் உள்ள அதிகப்படியான நார்ச்த்து செரிமானத்தை சீராக்கிறது. அதனால், உண்ணும் உணவானது வயிற்றில் விரைவில் உறிஞ்சப்படுவதை ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வருவது சிறந்த பலனை விரைவில் வழங்கிடும்.

மனநலம் மேம்படும்

வாழைப்பூ உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பெரிதும் மேம்படுத்த உதவிடும். வாழைப்பூ கசாயம் குடிப்பது உங்கள் மனநிலையை அதிகரிக்கிறது. வாழைப்பூவில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மனச்சோர்வுப் பிரச்சனையைத் தடுக்க உதவிடும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயாளிகளுக்கு உடலின் இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க வாழைப்பூ கசாயம் பெரிதும் உதவிடும். எனவே, நீரிழிவு நோய் இருப்பவர்கள் வாழைப்பூ கசாயம் குடிப்பதன் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திட முடியும்.

Boat Rockerz 150 Pro Bluetooth Neckband in Ear Earphones w/ 150hrs Playback
Recommended for You
Boat Rockerz 150 Pro Bluetooth Neckband in Ear Earphones w/ 150hrs Playback

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க