Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க...

A
Admin User
Journalist
December 17, 2021 5 min read 62 views
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க...

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரும் இருக்கின்றோம். அதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யக்கூடிய காய்கள், பழங்களை தேடி தேடி உண்கிறோம். அந்த வகையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தில் நெல்லிக்காயையும் தவறாமல் சேர்த்து வாருங்கள். மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய இது போன்ற உணவுகளை அனைவருமே சாப்பிடலாம். இப்போது நெல்லிக்காய் எந்தெந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது என்று தெரிந்து கொள்வதோடு, எப்படியெல்லாம் அதை உட்கொள்வது என்றும் பார்ப்போம்…

குரோமியம்

ஆம்லா என்றழைக்கப்படும் நெல்லிக்காயில் குரோமியம் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைத்திட உதவும். கொரோனா தொற்றால் உடலில் பாதிக்கப்படக்கூடிய உறுப்புகளில் இதயமும் ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நெல்லிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

நெல்லிக்காயில் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுவதால், உடலை பல நோய்களிலிருந்து காப்பாற்றிட முடியும். நெல்லிக்காய்க்கு ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன. அவை உங்கள் உடலில் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்கும் முகப்பரு மற்றும் பொடுகு தொல்லையை குறைப்பதற்கும் உதவும்.

கொழுப்பைக் குறைக்க

இதய நோய் தொடங்கி நீரிழிவு நோய், மேலும் பல நோய்களுக்கு வித்திடுவது என்றால் உடல் பருமன் தான். நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவது நிச்சயம். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டாமல் இருப்பதோடு, செரிமானத்தையும் சீராக்கும்.

சளி, இருமல் தொல்லையை நீக்க

கொரோனா வைரஸ் தொற்று ஒரு சுவாச தொற்று நோய் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, நமது சுவாச மண்டலத்திற்கு வலு சேர்க்க வேண்டிய நேரம் இது. நெல்லிக்காயால் அதனை செய்ய முடியும். சளி, இருமல் போன்ற அறிகுறிகளில் இருந்து விடுபட நெல்லிக்காய் பல காலங்களாகவே உபயோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும்.

நெல்லிக்காயை சாப்பிடும் விதம்

சந்தைகளில் சுலபமாக கிடைக்கக்கூடிய காய்களில் நெல்லிக்காயும் ஒன்று. இதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உட்கொள்வர். கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்க விதவிதமான நெல்லிக்காய் பதார்த்தங்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை காட்டிலும் வீட்டிலேயே செய்து சாப்பிடக்கூடிய நெல்லிக்காய் உணவுகளில் தான் அதிகப்படியான சத்து உடலுக்கு கிடைக்கிறது.

*நெல்லிக்காயில் சட்னி செய்து சாப்பிடலாம்.

*நெல்லிக்காய் ஊறுகாய் செய்தால் அருமையாக இருக்கும்.

*அல்லது நெல்லிக்காயின் சுவை பிடிக்கும் என்றால், உப்பு தொட்டு அப்படியே கூட சாப்பிடலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க