Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

அஸ்தமனத்திற்கு பிறகு உதயமாகும் குருவால் அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்...

A
Admin User
Journalist
March 26, 2022 1 min read 16 views
அஸ்தமனத்திற்கு பிறகு உதயமாகும் குருவால் அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்...

ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவானுக்கு என தனி இடம் உண்டு. தேவகுரு பிரஹஸ்பதியானவர் அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப்பணி, புனித இடம், செல்வம், தர்மம், அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றிற்கான கிரகம் என்று கூறப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதி குரு பகவான். அத்தகைய சிறப்புதிக்க குரு பகவான் கடந்த 24ம் தேதி அஸ்தமித்து, இன்றைய தினம், அதாவது மார்ச் 26 அன்று மீண்டும் உதயமாகிறார். குரு பகவானின் உதயம் மாலை 06:38 மணி அளவில் நிகழும். இது குருவின் புதிய உதயம் என்றே கூறலாம். குருவின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த பலன் ஏப்ரல் மாதம் 13ம் தேதி குரு அதிசாரமாக மீன ராசிக்கு செல்லும் வரை இருக்கும். இப்போது, இந்த கட்டுரையில் குரு பகவானின் இந்த உதயம் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்களைக் கொடுக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்
நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆனால் தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். அதிகப்படியான உற்சாகத்தைத் தவிர்க்கவும். பழைய நண்பரின் உதவியால் நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். மேலும், உங்கள் தாயிடமிருந்து எதிர்பாராத நேரத்தில் பண உதவி கிடைக்கும்.

ரிஷபம்
உங்கள் மனம் அமைதியற்ற நிலையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நேரமிது. குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றில் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உடன்பிறந்தோருடன் உங்கள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வாகன செலவு அதிகரிக்கக்கூடும். குழந்தை மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்
உங்கள் தன்னம்பிக்கை மேலோங்கும். ஆனால், உங்கள் அதீத ஆர்வத்தைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். தக்க சமயத்தில் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதனால், மன நிம்மதி ஏற்படும். உங்களது அதிகப்படியான கோபம் தணியும். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

கடகம்
மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கை மிகுதியாகவும், சந்தோஷம் அதிகரித்தும் காணப்படுவீர்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நேரமிது. மேலும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் குழப்பமானதாக இருக்கலாம். சில இனம்புரியாத பயம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த காலக்கட்டத்தில் உங்கள் உடன்பிறந்தோருடன் புனித யாத்திரை செல்லலாம்.

சிம்மம்
மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் ஒரு அரசியல்வாதியின் நட்பைப் பெறலாம். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். உங்கள் சேமிப்பும் குறைந்து, எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே, இந்த காலக்கட்டத்தில் தேவையற்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க முயன்றவரை முயற்சி செய்யுங்கள்.

கன்னி
உங்கள் மனம் அமைதியற்று இருக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். உத்தியோக மாற்றம் மூலம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். எழுத்து மற்றும் அறிவு சார்ந்த பணிகளில் உங்களது ஈடுபாடு அதிகரித்து காணப்படும். அலுவலகத்தில், உங்கள் மீதான பணி சுமை அதிகமாக இருக்கும். உடன்பிறந்தோரின் உதவியால், பெற்றோர்களின் வியாபாரம் வேகமெடுக்கும்.

துலாம்
உங்களது அதிகப்படியான கோபம் பெரும் இழப்பிற்கு வழி வகுக்கக்கூடும். எனவே, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும், இந்த காலத்தில் உங்கள் வருமானம் குறையலாம். மனம் சஞ்சலமாக இருக்கும். வீட்டு வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்திற்காக செலவுகள் கூடும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். எத்தகைய சூழலிலும், உங்கள் பேச்சில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

விருச்சிகம்
மனதில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். இதனால், உங்கள் தன்னம்பிக்கை குறையலாம். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லலாம். இதன்மூலம், உங்கள் மனம் நல்ல நிலையில் இருக்கும். இயற்கையாகவே, உங்கள் இயல்பில் எரிச்சல் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு வெற்றி வாகை சூடுவதற்கான நேரமிது. பல நல்ல செய்திகள் உங்கள் தேடி வரப்போகின்றன.

தனுசு
தேவையில்லாத சந்தேகங்கள் மனதில் தோன்றி உங்கள் தன்னம்பிக்கையைக் குறைய செய்யும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். கலை அல்லது இசை மீதான உங்களது ஆர்வம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் உங்களைத் தேடி வரலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். மனம் சஞ்சலமாக இருக்கும். தேவையற்ற சண்டைகள் மற்றும் சச்சரவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நண்பரின் உதவியால் சொத்தில் முதலீடு செய்ய நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்
நிதானமாக இருந்து தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். வணிகர்களுக்கு தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். இதனால், மன அமைதி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும், ஊதிய உயர்வு அவ்வளவு திருப்தி தராது. கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபடுவோர் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் விலகும்.

கும்பம்
காரணமே இல்லாமல் உங்கள் மனம் அமைதியற்று இருக்கும். குடும்பத்தில் முடிக்கப்படாத சில பணிகள் இந்த காலக்கட்டத்தில் முடிவமையும். வீட்டு பராமரிப்பு மற்றும் அலங்காரத்திற்கான செலவுகள் அதிகரிக்கும். இருப்பிகும், குடும்பத்தாருடன் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். திட்டமிடாத செலவுகள் வந்து திக்கு முக்காட செய்யும். எந்தவொரு சூழலிலும் அம்மாவின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.

மீனம்
முன்னேறத்தில் ஏற்படும் சிறு தடைகள் உங்கள் தன்னம்பிக்கையைக் குறையும். குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்த பாருங்கள். வாழ்க்கையில் குழப்பமான சூழல் நிலவும். அறிவுசார் வேலைகள் மூலம் நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆனால் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வேலையில் திடீர் தடங்கல்கள் ஏற்படும். இருப்பினும், நிதானமாக செயல்பட்டால் பிரச்சனையை வந்த வேகத்தில் திரும்பி போய்விடும்.

Chicco Baby Moments Shampoo for Tear-Free Bath times, Natural Ingredients, Suitable for baby’s tangle Free, smooth hair, No Phenoxyethanol and Parabens
Recommended for You
Chicco Baby Moments Shampoo for Tear-Free Bath times, Natural Ingredients, Suitable for baby’s tangle Free, smooth hair, No Phenoxyethanol and Parabens

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க