Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தான். உங்கள் ராசியும் இதில் உள்ளதா?

A
Admin User
Journalist
June 03, 2022 1 min read 27 views
இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு  நல்ல காலம் தான். உங்கள் ராசியும் இதில் உள்ளதா?

ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்கள் அதன் இயக்கத்தை மாற்றுவது என்பது மனித வாழ்வில் முழுமையான விளைவை ஏற்படுத்துகிறது. கிரக பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கக்கூடும். ஜூன் மாதத்தில் மட்டும் 5 ராசிகள் பெயர்ச்சி ஆகின்றன. அதாவது, ஜூன் 3 ஆம் தேதியா இன்று, புத பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பிறகு ஜூன் 5-ம் தேதி சனி கும்ப ராசியில் பிற்போக்கு நிலையில் சஞ்சரிக்கிறார். ஜூன் 15ஆம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றி மிதுன ராசியில் பிரவேசிக்கிறார். ஜூன் 18ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதையடுத்து ஜூன் 27-ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். இப்படி இந்த மாதத்தில் புதன், சனி, சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சஞ்சாரம் மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு இத்தனை நாட்களாக இருந்துவந்த கஷ்டங்கள் நீங்கி நல்ல காலம் பிறக்க போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி பணிகளை் மேற்கொள்பவர்கள் பணி தொடர்பாக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த இடமாற்றமும் ஏற்படலாம். இத்தகைய சூழலில், உங்கள் பேச்சில் கடுமை தன்மையை நீக்கி, பேச்சில் நிதானத்தை கொண்டு வரவும். ஆடை முதலியவற்றின் மீதான நாட்டம் அதிகரிக்கும். அதற்கான கூடுதல் பணமும் செலவு செய்யலாம். நிதி நிலையில் முன்னேற்றப் பாதை அமையும். வருமானம் பெருகும். இதனால் உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலையில் உற்ற நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நம்பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. குழந்தை மூலம் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர்கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றிற்காக வெளிநாட்டுக் குடியேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் இருப்பிட மாற்றமும் சாத்தியமாகும். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆனால், அதிகப்படியான ஆர்வத்தையும், அதனால் உண்டாகும் உற்சாகத்தையும் தவிர்க்கவும். குடும்பத்தில் தாய் மற்றும் வயதான பெண் மூலம் உங்களுக்கு பண உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் உத்தியோகஸ்தர்களின் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பழைய சொத்துகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். அதுதவிர, தாயிடமிருந்தும் பண வரவைப் பெறலாம். கலை மற்றும் இசையில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனுடன், உங்கள் வருமானமும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சக ஊழியர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனாக வருமானம் பெருகும். புது வாகன யோகமும் உண்டாகும். ஆரோக்கியத்தைப் பற்றி கவலை நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த மனகசப்பு படிபடியாக குறைந்து, ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சி ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரித்து முன்னேற்ற பாதையில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலையில் உற்சாகமும் ஆர்வமும் இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் விரிவாக்க பணியை செய்வதற்கான வாய்ப்பு இருக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இதனால் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் மீதான பணிச்சுமையும் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பிற்கான பலனாக வருமானமும் அதிகரிக்கும். இருப்பிட மாற்றமும் சாத்தியமாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் தொழில் விரிவடையும். பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆடை முதலியவற்றின் மீதான நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். இதனால் நீங்கள் மனஅமைதியைப் பெற்றிடலாம்.

HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)
Recommended for You
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க