Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

நெய் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல அழகை மேம்படுத்துவதிலும் சிறந்தது...

A
Admin User
Journalist
January 25, 2022 4 min read 66 views
நெய் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல அழகை மேம்படுத்துவதிலும் சிறந்தது...

நம் வீட்டிலேயே தயாரிக்கப்பட கூடிய பொருள் நெய். அந்த நெய், உங்கள் முகத்தை சுத்தம் செய்வதிலிருந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை நன்மை பயக்கும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், கடைகளில் விற்கப்படும் நெய்யை வாங்கி அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதிலும், சிலர் நெய்யில் அதிக கொழுப்பு உள்ளது அதனால் அதை சாப்பிட கூடாது என்று பிறருக்கும் அறிவுரை கூறுவதுண்டு. நெய்யில் கொழுப்பு என்பது உண்மை தான். ஆனால், அது நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது, நாம் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக் கூடிய அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ள போகிறோம்…

கண்கள்

நெய் உண்மையில் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று வைட்டமின் ஏ. வைட்டமின் ஏ குறைபாடு கண் பார்வையை பாதிக்கும் என்பதை அறிவீர்கள். எனவே, நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கும் தேவையான அளவு வைட்டமின் ஏ கிடைக்கிறது. எனவே, இது கண்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

உதடு

உதட்டு வெடிப்புகளை சரிசெய்வது முதல் சரும பராமரிப்பு வரை முகத்தை மேம்படுத்த நெய்யை தாராளமாக பயன்படுத்தலாம். தோலில் உள்ள வீக்கம் மற்றும் காயங்களை குணப்படுத்த நெய் உதவும். வாயில் ஏதேனும் புண் இருந்தால் கூட அதற்கு நெய் தடவுவது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

மூளை

ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் போது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நெய் உதவக்கூடும். ஆயுர்வேதத்தில் நெய் நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், நினைவாற்றலை மேம்படுத்த மூளை டானிக்காகப் நெய் பயன்படுத்தப்படலாம்.

கொழுப்பைக் குறைக்கும்

இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால் இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த விஷயத்தில், குறைந்த அளவு நெய்யை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவிடும்.

வலுவான எலும்புகள்

எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருப்போருக்கு நெய் ஒரு அருமருந்து. ஏனென்றால், இளம் வயது எலும்பு முறிவு மற்றும் அவற்றை இணைப்பதில் சிரமம் போன்றவை பலவீனமான எலும்புகளின் அறிகுறியாகும். இந்த பிரச்சனைக்கு எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் மிகவும் நல்லது. ஏனெனில், எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு அவற்றின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க