Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

சம்மர்ல எவ்ளோ மேக்கப் போட்டாலும் நிக்க மாட்டேங்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

A
Admin User
Journalist
May 03, 2022 1 min read 21 views
சம்மர்ல எவ்ளோ மேக்கப் போட்டாலும் நிக்க மாட்டேங்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

கோடைக்காலத்தில் அனைவருக்கும் ஏற்படும் முதல் பயம் வியர்வைப் பற்றி பயம் தான். நாம் எத்தனை முறை குளித்தாலும் வியர்வையை மட்டும் தடுக்க முடியாது. அது யாருக்கு பிரச்சனையோ, இல்லையோ கண்டிப்பாக மேக்கப் போடும் பெண்களுக்கு பெரும் சிக்கலாகவே இருக்கும். ஏனென்றால், அவர்கள் போடும் மேக்கப் அனைத்தும் வியர்வையால் கலைந்து விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில், மேக்கப் போடுவது என்பது சற்று கடினமான வேலை தான். ஏனென்றால் மேக்கப் போடுவது என்பது சிலரது வேலையில் அவசியமான ஒன்றாக இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு, கோடைகால வியர்வை தொல்லையிலும் கலையாமல் மேக்கப் போடுவதற்கான சில உதவிகரமான குறிப்புகளை தான் இந்த கட்டுரையில் கொடுத்துள்ளோம். இதனை நீங்கள் படித்து தெரிந்து, முயற்சி செய்து பாருங்கள், நிச்சயம் பிறருக்கும் இதனை அறிவுறுத்துவீர்கள். சரி, இப்போது கோடைகால மேக்கப் குறிப்புகளை தெரிந்து கொள்வோம்…

ப்ரைமருக்கு முன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்

நீங்கள் மேக்கப் போட போகிறீர்கள் என்றால், அதற்கான முதல் படி ப்ரைமர் போடுவது தான். இருப்பினும், அதற்கு முன்பே, நீங்கள் முகத்தில் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் சிறந்த மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை வெளியேறாமல் தடுப்பதோடு, ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். அதன் பிறகு, முகத்தில் சன்ஸ்கிரீன் தடவவும். மேலும், நீங்கள் விரும்பினால் மாய்ஸ்சரைசர் கொண்ட சன்ஸ்கிரீனை கூட பயன்படுத்தலாம். அது உங்கள் விருப்பம்.

லைட் மேக்அப் சிறந்தது

கோடையில் அலுவலகம், மீட்டிங் அல்லது எதாவது விழாவிற்கு செல்ல வேண்டுமெனில், லேசான அல்லது மிக குறைந்த அளவில் மேக்கப் செய்யுங்கள். உண்மையில், கோடையில் அதிக அளவில் மேக்கப் போடுவது உங்கள் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அவற்றால் முகப்பருக்கள் மற்றும் வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.

பவுடர் பயன்படுத்துங்கள்

ஃபவுண்டேஷன், கன்சீலர் போன்றவற்றை முகத்தில் தடவிய பின் பவுடரால் மேக்கப்பை செட் செய்ய வேண்டியது அவசியம். இந்த நேரத்தில், உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ப அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே நேரத்தில், ப்ளஷ் பயன்படுத்த வேண்டாம்.

கண் மேக்கப்

நீங்கள் மஸ்காரா போட்ட பிறகு, அதன் மேல் பவுடரை வைத்து டச்அப் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மஸ்காரா பரவாமல் நீண்ட நேரத்திற்கு பாதுகாக்கப்படும். இதனுடன் கோடையில் வாட்டர் ப்ரூஃப் ஐலைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

லிப்ஸ்டிக் போடும் சரியான முறை

கோடை வெப்பத்தில் லிப் பாம் அல்லது லிப் டின்ட் தடவுவது சிறந்தது. ஆனால், நீங்கள் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்த விரும்பினால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உதடுகளில் ப்ரைமரைப் பயன்படுத்துங்கள். ஏனெனில், அது உங்கள் லிப்ஸ்டிக்கை பல மணி நேரத்திற்கு அப்படியே வைத்திருக்க உதவும்.

MI Xiaomi 22.5W Fast Charger with USB-C Cable, Quick Charge 3.0 Power Adapter Compatible with Redmi Note Series, Poco, Mi, Any Type C Devices
Recommended for You
MI Xiaomi 22.5W Fast Charger with USB-C Cable, Quick Charge 3.0 Power Adapter Compatible with Redmi Note Series, Poco, Mi, Any Type C Devices

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க