Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

வீட்டுலயே உட்கார்ந்து வேலை பார்த்து முதுகு ரொம்ப வலிக்குதா? இத செய்யுங்க வலி பறந்து போய்டும்…

A
Admin User
Journalist
February 07, 2022 1 min read 24 views
வீட்டுலயே உட்கார்ந்து வேலை பார்த்து முதுகு ரொம்ப வலிக்குதா? இத செய்யுங்க வலி பறந்து போய்டும்…

கொரோனா தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பலரது வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. ஆபீஸே கதி என்று இருந்தவர்கள் கூட தற்போது வீடே கதி என்று மாறிவிட்டனர். ஆனாலும், ஆபிஸ் மற்றும் வீட்டிற்கு அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இருந்துவிட வில்லை. ஆபீஸில் உட்கார்ந்து பார்த்த வேலையை தற்போது வீட்டில் உட்கார்ந்து பார்க்கிறோம். எப்படியானாலும், மணிக்கணக்கில் உட்கார்ந்து இருப்பது என்பது தான் வேலை என்று ஆகிவிட்டது.

ஓடி ஆடி வேலை செய்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்று தான். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் உட்கார்ந்து செய்யும் வேலை தான் அதிகம். அப்படிப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இளம் வயதிலேயே முதுகு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றன. இதற்காக மருத்துவமனை சென்று மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்வது அனைத்துமே உடலிற்கு மேற்கொண்டு தீங்கு விளைவிக்கக்கூடும். எனவே, வீட்டில் இருந்தபடியே, முகுது வலியை எப்படி சுலபமாக போக்குவது என்பதை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

மசாஜ்
கடுகு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 4, செலரி – சிறிது ஆகியவற்றை ஒரு வாணலியில் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர், அதனை குளிர வைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். விரைவில் வலியில் இருந்து விடுபடுவதை நீங்களே உணர்வீர்கள்.

உப்பு ஒத்தடம்
முதுகு வலி அதிகம் இருக்கும் பட்சத்தில் இரவு தூங்குவதற்கு முன்பு, 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கல்உப்பை எடுத்து சூடான வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். வறுத்த உப்பை ஒரு காட்டன் துணியில் போட்டு, ஒரு மூட்டை போட கட்டிக் கொள்ளவும். உப்பின் சூடு ஆறுவதற்குள் வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடி நிவாரணம் பெறலாம். மிகவும் இதமாக இருப்பதோடு, வலியை வீரியமும் குறைந்திடும்.

நடைபயிற்சி
ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்துக்கொண்டே இருந்தால் வலி அதிகரிக்கத் தான் செய்யும். எனவே, வேலை செய்யும் போது, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, சிறிது நடப்பது, குனிந்து நிமிருவது போன்ற உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்று.

கால்சியம் நிறைந்த உணவுகள்
எலும்புகள் வலிபெறுவதற்கு கால்சியம் அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்து ஒன்று தான். ஆனால், முதுகு வலி ஏற்பட்டவுடனே தெரிந்தது கூட மறந்து விடுகிறது பலருக்கு. எனவே, முகுது வலியை போக்கிட உணவில் கால்சியத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

செலரி
முதுகு வலியை போக்கிட எளிய வழிகள் ஒன்று செலரி சாப்பிடுவது. சிறிது செலரியை எடுத்து வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், அதனை வாயில் போட்டு மெதுவாக மென்று பின்னர் விழுங்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முதுகு வலியில் இருந்து விரையில் மீண்டு விடலாம்.

குறிப்பு

மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை தொடர்ந்து செய்து வாருங்கள். எப்படிப்பட்ட முதுகு வலியும் மாயமாக மறைந்திடும். முயற்சி செய்து பார்த்துவிட்டு, தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
Recommended for You
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க