Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

தினமும் பீனட் பட்டர் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்...

A
Admin User
Journalist
March 10, 2022 1 min read 23 views
தினமும் பீனட் பட்டர் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்...

உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய விஷயங்களை நாம் தேடி தேடி அறிந்த அதனை பின்பற்றி வருகிறோம். அதிலும், ப்ரஷான பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நம் உடலுக்கு நன்மைகள் வாரி வழங்க கூடியவை. உலர் பழங்கள் சற்று விலை அதிகம் என்பதால் அதை வாங்கி சாப்பிட தயங்குவோர் தங்களது அன்றாட உணவுகளில் வெண்ணெய், நெய், பீனட் பட்டர் எனும் வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். சுவையான ஒன்றை தினமும் சாப்பிட சொன்னால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள். அதிலும், சில சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பீனட் பட்டரை தினந்தோறும் சாப்பிடுவது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகள் பயக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பலன்களைப் பற்றி இப்போது நாம் சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்…

பீனட் பட்டரின் நன்மைகள்

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்

பீனட் பட்டர் உட்கொள்வது பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்திடுமாம். இதன் காரணமாக பெண்கள் தினமும் தங்களது உணவில் பீனட் பட்டரை சேர்த்து கொள்வது நல்லது. ஆம், ஏனெனில் இது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயின் அபாயத்தை 40 சதவீதம் வரை குறைத்திடும் என்கின்றனர் நிபுணர்கள்.

கண்களுக்கு நன்மை

இன்றைய காலக்கட்டத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் வேலை செய்பவர்களே அதிகம். அதிலும், பொழுதுபோக்கிற்கும் மொபைலை தான் அனைவரும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கண்கள் மிகவும் சோர்வடைவதோடு, பெரும் பாதிப்பிற்கும் உள்ளாகின்றன. அதே நேரத்தில், இதன் காரணமாக, கண்களின் நரம்புகளும் விரைவில் வறண்டுவிடுகின்றன. பீனட் பட்டர் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதால் தினந்தோறும் அதனை உட்கொள்வது உங்கள் கண்களை பாதிப்பில் இருந்து தடுத்து காத்திடும்.

செரிமான அமைப்புக்கு சிறந்தது

பீனட் பட்டரில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஒரு சிறந்த செரிமான அமைப்பு உடலில் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. அதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது சிறந்த தீர்வாக இருக்கும். எனவே, நார்ச்சத்து நிறைந்த பீனட் பட்டரை தினமும் சாப்பிடுவது சிறந்த செரிமான மண்டலத்தை உருவாக்கிடும்.

சிறுநீரக கல் பிரச்சனையை குறைத்திடும்

பீனட் பட்டர் தயாரிக்க வேர்க்கடலை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும் குணம் வேர்க்கடலையில் உள்ளது. எனவே, அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினமும் காலையில் எழுந்து பிரட் உடன் பீனட் பட்டரை சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக கல் பிரச்சனையை விரைவில் குறைத்திட உதவும்.

DSC Lava Kashmir Willow Short Handle Cricket Bat, Size - Mens
Recommended for You
DSC Lava Kashmir Willow Short Handle Cricket Bat, Size - Mens

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க