Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியெனில் இவற்றை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்…

A
Admin User
Journalist
December 05, 2021 1 min read 26 views
கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியெனில் இவற்றை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்…

கர்ப்பமாக வேண்டும் என்று ஒருவர் நினைத்து விட்டால், அதற்கு முதலில் தங்களது உணவு பழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், கருவுருதலை ஊக்குவிக்கும் வகையிலான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை குறைத்திடலாம் என்கின்றனர். பெண்கள் தங்களது கர்ப்பத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில், உண்ணும் உணவில் ஃபோலிக் அமிலம், ஃபோலேட், கால்சியம், அயோடின், இரும்பு, கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கர்ப்பத்திற்கு முன்னர் அதிக காய்கறிகளை சாப்பிடுவது குறைப்பிரசவ அபாயத்தை குறைக்க உதவுகிறதாம். ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் பச்சை பீன்ஸ் போன்ற காய்கறிகள் ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன. நீங்கள் கர்த்தரிப்பதற்கான முயற்சியில் உள்ளீர்கள் என்றால், இந்த முக்கிய ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஃபோலிக் அமிலம்

கர்ப்பமாக முயற்சி செய்யும் போதும், கர்ப்பம் தரித்த பின்பும் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று ஃபோலிக் ஆசிட் அல்லது ஃபோலைட். இந்த வைட்டமின் பி சத்தானது, இயற்கையாகவே சில உணவுகள் உள்ளது. அதாவது, பச்சை நிற காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. ஃபோலிக் அமிலம் ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் ஸ்பைனா பிஃபிடா மற்றும் அனென்ஸ்பாலி போன்ற பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கவும் உதவுகிறது. ஃபோலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பரிந்துரைக்கப்பட்ட அளவை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது. எனவே, 400 முதல் 600 எம்.சி.ஜி ஃபோலிக் அமிலத்தைக் கொண்ட வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

கால்சியம்

உங்கள் இனப்பெருக்க அமைப்பு சீராக இயங்குவதற்கு கால்சியம் மிகவும் முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாது, இது விரைவாக கருத்தரிக்கவும் உதவக்கூடியது. மேலும், குழந்தையின் எலும்புகளின் ஆரோக்கியத்திற்காக கர்ப்பமாக இருக்கும் போது கால்சியத்தை சேமிக்க வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் போதுமான அளவு கால்சியம் இல்லாவிட்டால், உங்கள் எலும்புகளிலிருந்து வரும் கால்சியமானது வளரும் கருவுக்கு வழங்கப்படும். இதனால் எதிர்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் (உடையக்கூடிய எலும்புகள்) ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். கருத்தரிக்க முயற்சிப்பவர்களும், கருவுற்ற தாய்மார்களும் ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 மி.கி. அளவிற்கு கால்சியத்தை பெற முயற்சிக்க வேண்டும். பால், தயிர், சீஸ் போன்ற உணவுகளிலிருந்தும், கேல் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளிலிருந்தும் கால்சியம் அதிகம் கிடைக்கப்பெறும்.

இரும்புச்சத்து

உங்கள் உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து இருந்தால், நீங்கள் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இரும்புச்சத்தானது, உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. மேலும், குழந்தைக்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்கும் இது மிகவும் முக்கியமானது. மிகக் குறைவான அளவில் இரும்பு சத்து இருந்தால், அது குறைபிரசவம் அல்லது குறைவான எடையில் குழந்தை பிறப்பது போன்றவற்றிற்கான அபாயத்தை அதிகரிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 18 மி.கி இரும்புச்சத்து தேவைப்படுகிறது. வலுவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள், இறைச்சிகள் மற்றும் கீரை போன்றவற்றை இரும்புச்சத்துக்கான சிறந்த ஆதாரங்கள் ஆகும்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்

கர்ப்பமாவதற்கு முந்தைய காலத்தில், உண்ணும் உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சேர்க்கவும். இந்த ஊட்டச்சத்து கருத்தரிக்க தேவையான முக்கிய ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் இனப்பெருக்க உறுப்புகளின் சுழற்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த ஊட்டச்சத்தை, கடல் உணவுகள், புல் ஊட்டப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற உணவுகளிலிருந்து பெறலாம்.

அயோடின்

உடலில் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும், தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய, இந்த தாது தேவைப்படுகிறது. கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு 150 எம்.சி.ஜி அயோடின் சேர்க்க வேண்டும். அயோடினானது, பால் பொருட்கள் மற்றும் அயோடைஸ் உப்பு ஆகியவற்றில் காணப்படுகிறது.

நார்ச்சத்து

கர்ப்பத்திற்கு முந்தைய கால உணவில் நார்ச்சத்து போன்ற மெதுவாக ஜீரணிக்கக்கூடிய, கார்போஹைட்ரேட்டுகளும் இடம் பெற வேண்டும். நாளொன்றிற்கு 10 கிராம் அளவிற்கு உட்கொள்ளும் நார்ச்சத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம், கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகரிக்க உதவும். மேலும், கர்ப்பகால நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தையும் குறைத்திட உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். முழு தானியங்கள், அதிக நார்ச்சத்துள்ள தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

DOCTOR EXTRA SOFT Men's Classic Casual Sports Clogs/Sandals with Adjustable Back Strap for Adult | Comfortable & LightWeight| Stylish & Anti-Skid|Waterproof & Everyday Use Mules for Gents & Boys D-513
Recommended for You
DOCTOR EXTRA SOFT Men's Classic Casual Sports Clogs/Sandals with Adjustable Back Strap for Adult | Comfortable & LightWeight| Stylish & Anti-Skid|Waterproof & Everyday Use Mules for Gents & Boys D-513

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க