Friday, August 07, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

வாழைப்பழத்தை வெந்நீர் கூட சாப்பிட்டா வெயிட் குறையுமா?

A
Admin User
Journalist
January 04, 2022 4 min read 158 views
வாழைப்பழத்தை வெந்நீர் கூட சாப்பிட்டா வெயிட் குறையுமா?

பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், வாழைப்பழத்தை வெந்நீருடன் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பால்-வாழைப்பழம் உங்கள் எடையை அதிகரிக்க செய்யும். அதுவே, வாழைப்பழத்தை வெதுவெதுப்பான நீருடன் உட்கொள்வது உங்கள் எடையை குறைக்க உதவும். அதிகரித்து வரும் எடை மற்றும் தொப்பையை குறைக்க நீங்கள் இந்த முறையை தாராளமாக முயற்சித்து பார்க்கலாம். உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிமுறைகளைப் பற்றி பலன் கிடைக்காமல் போனவர்கள், இந்த வழியை முயற்சித்து பாருங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தைக் கண் கூடாக பார்க்க முடியும். அதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை வெந்நீருடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றிடும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். சிறந்த வளர்சிதை மாற்றமானது கொழுப்பை எளிதில் எரித்திடும். இதனால், உடல் எடை குறைந்திடும்.

புத்துணர்ச்சியைக் கொடுக்கும்
நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், காலை எழுந்தவுடன் தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரும் வாழைப்பழத்தையும் சாப்பிடுங்கள். இது உங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து, பலவீனத்தை நீக்கி, நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
வாழைப்பழத்தை வெந்நீருடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் சோடியம் அளவு சமநிலையில் இருக்கும். இது உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, உடலில் இருக்கக்கூடிய அசௌகரியத்தையும் நீக்கிடும்.

சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைக்கும்
பொதுவாக வெந்நீர் குடிப்பதால் உடலில் ஆங்காங்கே தேங்கியிருக்கக் கூடிய நச்சுக்கள் வெளியேறிடும். வாழைப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் பி6 போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. எனவே, இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

செரிமானத்தைத் தூண்டும்
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் வாழைப்பழத்தை வெதுவெதுப்பான நீருடன் சாப்பிடுங்கள். இது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி, உண்ணும் உணவை நன்கு செரிக்க வைக்கும். இதனால் அமிலத்தன்மை மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளும் நீங்கிடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,750
தங்கம் (24k)
1 கிராம்
₹14,438
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க