Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

பார்லர் போகாமல், பைசா செலவில்லாமல் வீட்டிலேயே ஃபேஷியல் பண்ணலாம்...

A
Admin User
Journalist
January 20, 2022 1 min read 24 views
பார்லர் போகாமல், பைசா செலவில்லாமல் வீட்டிலேயே ஃபேஷியல் பண்ணலாம்...

கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்திருக்கும் இந்த சூழலில் வெளியே செல்வதென்பதே மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது. நோய் தொற்றில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே செய்வதைத் தவிர்த்தாக வேண்டும். இது பெண்களுக்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கக் கூடும். ஏனெனில், அவர்கள் தங்களது அழகை பராமரிக்க அடிக்கடி பார்லர் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், அது இந்த சூழலில் சற்று அபாயகரமானது. அப்படியெனில் தங்கள் அழகை பராமரிக்க முடியாதா என்று கேட்டால் அதுவும் இல்லை. இனி பார்லர் போகாமல், பணம் செலவழிக்காமல் வீட்டில் இருந்தபடியே ஃபேஷியல் செய்து கொள்ளலாம். அதுவும், பார்லர் சென்று ஃபேஷியல் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் வீட்டில் செய்தாலும் கிடைக்கும்.

பெண்களுக்கு வீட்டிலேயே ஃபேஷியல் செய்தது போன்ற முக பளபளப்பை எப்படி பெறுவதென்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ளது படி ஒவ்வொன்றையும் முறையாக செய்தாலே போதும். அதுவும் கெமிக்கல் நிறைந்த எந்தவொரு பொருளும் இல்லாமல், பழத்தை வைத்தே ஈஸியாக ஃபேஷியல் செய்யலாம். வாருங்கள் அதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்…

முகத்தை சுத்தம் செய்வது
அனைத்து வகையான சரும பராமரிப்பும் முதலில் முகத்தை சுத்தம் செய்வதில் தான் தொடங்கும். முகத்தில் படிந்திருக்கும் அனைத்து அழுக்குகளையும் அகற்றுவதற்கு காய்ச்சாத பால் மற்றும் தண்ணீர் உபயோகிக்க வேண்டும். முகத்தை நீரில் கழுவிய பிறகு, சிறிது பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, பஞ்சில் தொட்டு தொட்டு முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து துடைத்திடவும்.

இயற்கை ஸ்கரப்
பால் கொண்டு முகத்தை சுத்தப்படுத்தியதும், இயற்கை எஸ்போலியேடரான எலுமிச்சை போன்றவற்றை உபயோகித்து முகத்தில் உள்ள இறந்த செல்கள், மீதமிருக்கும் மாசுக்களை அகற்ற வேண்டும். அதற்கு முதலில் ஸ்கரப் தயார் செய்ய வேண்டும். அதற்காக, ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் சிறிது பேக்கிங் சோடா, சிறிது நீர் சேர்த்து சற்று கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும். தயாரித்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் தடவி, 5 நிமிடங்களுக்கு ஸ்கரப் செய்யவும். இதன்மூலம் முகம் மிருதுவாவதோடு, பளிச்சென்று மாறிவிடும்.

சரும துளைகளை திறப்பது
முகத்தில் இருக்கும இறந்த செல்களை நீக்கிய பிறகும், சரும துளைகளானது அடைக்கப்பட்டு தான் இருக்கும். எனவே, சரும துளைகளை திறந்தால் தான் சரும சுவாசிக்கும். அதற்கு ஆவி பிடிப்பது சிறந்த வழி. ஃபேஷியல் ஸ்டீமர் அல்லது ஆவி பிடிப்பது இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம். இது சரும துளைகளை திறப்பது மட்டுமல்லாது, சருமத்தில் ஆங்காங்கே இருக்கும் ப்ளாக்டெட்ஸ் நீக்கவும் உதவிடும்.

ஃபேஸ் பேக் தயாரிப்பது
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் செய்த பிறகு, நீங்களே உங்களது சருமத்திற்கு ஏற்றாற்போல், பழங்களை உபயோகித்து ஒரு ஃபேஸ் பேக் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு விதமான ஃபேஸ் பேக் பொருந்தும். உதாரணத்திற்கு, வறண்ட சருமமானால், வாழைப்பழம் மற்றும தேன் கலந்த ஃபேஸ் பேக். அதுவே, வயதாகும் அறிகுறியை தடுப்பதற்காக என்றால், பப்பாளி மற்றும் தேன் கலந்த ஃபேஸ் பேக் சரியாக இருக்கும். மேலும், எண்ணெய் வழியும் சருமமாக இருந்தால், பெர்ரி பழங்கள் மற்றும எலுமிச்சைச் சாறு கலந்த ஃபேஸ் பேக் பொருந்தும்.

ஃபேஸ் பேக்
தயாரித்து வைத்துள்ள ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவி மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு, 5 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர், சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிடலாம். பின்பு, மிதுவான துணி கொண்டு மெதுவாக முகத்தை துடைத்து கொள்ளவும்.

மேலே கூறிய படி செய்யும் பட்சத்தில், பார்லர் சென்று வந்தால் சருமத்தில் என்ன வித்தியாசம் தெரியுமோ, அதே அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்களே அதனை பார்க்க முடியும்.

Chicco Baby Moments Shampoo for Tear-Free Bath times, Natural Ingredients, Suitable for baby’s tangle Free, smooth hair, No Phenoxyethanol and Parabens
Recommended for You
Chicco Baby Moments Shampoo for Tear-Free Bath times, Natural Ingredients, Suitable for baby’s tangle Free, smooth hair, No Phenoxyethanol and Parabens

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க