Friday, August 07, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

வெந்நீரில் இதை கலந்து குடிச்சா உடல் எடை வேகமா குறையுமாம்...

A
Admin User
Journalist
January 17, 2022 4 min read 185 views
வெந்நீரில் இதை கலந்து குடிச்சா உடல் எடை வேகமா குறையுமாம்...

இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பலரும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு இன்றைய உணவு பழக்கங்களும் காரணமாக அமைகின்றன. சரி, உடல் எடை அதிகரித்து விட்டது. என்ன செய்து உடல் எடையை குறைப்பது என்ற தேடல் மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அதற்கான ஒரு தீர்வைப் பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். அதிலும், நம் வீட்டில் உள்ள ஒரு பொருளை வைத்து மட்டுமே இதனை சுலபமாக செய்திட முடியும் என்பதையும் கற்று கொள்ள போகிறோம்.

வெல்லத்தின் ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் நன்கு அறிந்திருக்கலாம். வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குளிர் காலத்தில் அதை சாப்பிடுவது அமிர்தத்தைப் போல கருதப்படுகிறது. ஆனால், வெல்லத்தைத் தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? வெல்லத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.

இரத்த சோகையைத் தடுக்கும்

வெல்லம் கலந்த தண்ணீரை குடிப்பது இரத்த சோகை பிரச்சனையை குறைப்பதில் சிறந்த பலனிக்கக் கூடியது. ஏனெனில், வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து, ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய இரத்த சோகையை தடுக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும்

வெல்லத்தை வெந்நீர் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்கவும், உடலில் சேரத்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும் உதவக்கூடியது. உண்மையில், இது பித்த நீர் சுரப்பை அதிகரிக்க செய்து செரிமானத்தை துரிதப்படுத்தும், அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தும் மற்றும் வாயு தொல்லையைக் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வெல்லம் கலந்த தண்ணீரை குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உண்மையில், மஞ்சள், மிளகு, பெருஞ்சீரகம், சீரகம், துளசி, கீரை, புதினா, திரிபலா மற்றும் நெல்லிக்காய் ஆகியவை மருத்துவ குணமுள்ள வெல்லம் தயாரிக்கும் போது பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனைத்து பொருட்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லம் தானாகவே சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஒன்றாக மாறும். வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,750
தங்கம் (24k)
1 கிராம்
₹14,438
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க