இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பான, தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையால் பலரும் போராடி வருகின்றனர். இப்போதெல்லாம் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய தூக்கம் இல்லாதது என பல காரணங்கள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பினும், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. இருந்தாலும், இரத்த அழுத்தத்தை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாது. தினந்தோறும் மருந்து, மாத்திரைகள் உட்கொண்டாலும் அதனால் எந்த பயனும் இருப்பது கிடையாது. அதனால்தான், வீட்டில் உள்ள பொருளை வைத்தே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பதை இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…
இரத்த அழுத்தத்ததைக் கட்டுப்படுத்தும் மிளகு
பொதுவாகவே கருப்பு மிளகு உடல்நலத்திற்கு மிகுந்த நன்மை பயக்கக் கூடியது. ஆயுர்வேத மருத்துவ முறையில் மிளகு முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும், கருப்பு மிளகு உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவிடும். அதிக பணம் செலவு செய்து மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டும் கட்டுப்படாத இரத்த அழுத்தத்தை வீட்டு சமையல் அறையில் இருக்கும் மிளகு தூள் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.
மிளகைப் பயன்படுத்துவது எப்படி?
இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரங்களில், 1 கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் சேர்த்து கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். மிளகில் காணப்படும் பைபரின், ஒரு மருந்து போல் செயல்பட்டு இரத்த அழுத்தத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.
கருப்பு மிளகு உட்கொள்வதன் நன்மைகள்
- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதைத் தவிர, மிளகு உங்கள் இதயத்திற்கும் நன்மை பயக்கும். சொல்லப்போனால், இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் மிளகிற்கு உண்டு.
- கருப்பு மிளகு உடல் எடை குறைப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகு சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைத்திடலாம்.
- கருப்பு மிளகை தினசரி உணவில் சேர்த்து கொண்டால், மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளில் இருந்து தப்பிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை அல்லது அமிலத்தன்மை பிரச்சனை இருந்தால், நீங்கள் கருப்பு மிளகு சாப்பிடலாம்.
- கருப்பு மிளகு ஆஸ்துமா மற்றும் மூல நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது உங்களுக்கு நன்மை பயக்கும். மூல நோய்க்கு பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளக்கூடாது என்பர். எனவே, அதற்கு பதிலாக உணவில் காரத்திற்காக மிளகு சேர்ப்பது அந்தப பிரச்சனையை சரிசெய்திட உதவிடும்.