Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

இனி மேல் மாம்பழம் சாப்பிட்டா கொட்டையை தூக்கி போடாதீங்க!!!

A
Admin User
Journalist
April 28, 2022 1 min read 23 views
இனி மேல் மாம்பழம் சாப்பிட்டா கொட்டையை தூக்கி போடாதீங்க!!!

கோடைகாலம் வந்தாச்சு. கோடைகாலம் என்ற உடனே அனைவருக்கும் நிறைவிற்கு வருவது மாம்பழம் சீசன் தான். விதவிதமான மாம்பழங்களை கோடைகாலத்தில் ரசித்து ருசித்து நம்மால் சாப்பிட முடியும் என்பது இதற்கு முக்கிய காரணம். அதுதவிர, கோடைகாலத்தில் மாம்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். சரி, பொதுவாக அனைவரும் மாம்பழத்தை சாப்பிட்டால் அதன் கொட்டை தூக்கி போட்டு விடுவார்கள். ஆனால், அது தவறான செயல். ஆம், மாம்பழத்தில் எவ்வளவு ஆரோக்கிய காரணிகள் உள்ளனவோ, அதே போல் அதன் கொட்டையிலும் ஏராளமான சத்துக்கள் மறைந்துள்ளது. இப்போது, மாங்கொட்டையில் உள்ள சத்துகள் என்னென்ன, எந்த பிரச்சனையை சரி செய்ய அது உதவிடும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

வயிற்றுப்போக்கு
மாங்கொட்டையை உடைத்தால் அதன் உட்பகுதியில் பருப்பு மாதிரியான ஒன்று இருக்கும். அதனை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது மாங்கொட்டை பொடியை கலந்து சிறிது தேன் சேர்த்து பருகலாம்.

இரத்த ஓட்டம்
மாங்கொட்டைகள் இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது. உண்மையில், மாங்கொட்டைப் பொடியை உட்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவிடும். இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்திடும்.

இரத்த அழுத்தம்
மாங்கொட்டையை உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவிடும். உண்மையில், இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்திடும். ஆம், உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மாங்கொட்டை பொடியை மிகச் சிறிய அளவில் (1 கிராம்) உட்கொள்ள வேண்டும்.

அசிடிட்டி
அசிடிட்டி பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால் மாங்கொட்டை பொடி சிறந்த தீர்வினை அளிக்கும். ஆம், மாங்கொட்டைகளில் பீனால்கள் மற்றும் பீனாலிக் கலவைகள் நிறைந்துள்ளன, அவை செரிமானத்திற்கு மிகவும் உதவிடும்.

ஸ்கர்வி
வைட்டமின் சி குறைப்பால் ஏற்படும் ஸ்கர்வி நோய்க்கு, வைட்டமின் சி நிறைந்த மாங்கொட்டை பொடி அருமருந்தாக செயல்படுகிறது. ஆம், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, மாங்கொட்டை பொடியில் இரண்டு பங்கு வெல்லம் மற்றும் எலுமிச்சை சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

மாங்கொட்டை பொடி செய்முறை
முதலில் மாம்பழத்தின் உள்ளே இருக்கும் பெரிய கொட்டை சிறிது வெயிலில் உலர வைக்கவும். பின்னர், அதனை உடைத்து பார்த்தால் அதற்குள்ளே சிறிது கொட்டை ஒன்று இருக்கும். அதை எடுத்து, அதையும் வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்து அரைத்தால் மாங்கொட்டை பொடி தயார். இந்த பொடியை ஒரு முறை உட்கொண்டால் 1 கிராமிற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

Memory Foam Car Seat Back Support, Orthopedic Lumbar Back Rest for Back Pain Relief, Back Support Pillow for Office ChairCarBack Support Pillow
Recommended for You
Memory Foam Car Seat Back Support, Orthopedic Lumbar Back Rest for Back Pain Relief, Back Support Pillow for Office ChairCarBack Support Pillow

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க