Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி!!!

A
Admin User
Journalist
February 17, 2022 1 min read 21 views
திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி!!!

பிரியாணி யாருக்கு தான் பிடிக்காது. அதிலும், ஒவ்வொரு ஊரிலும் பிரியாணிக்கு தனி சுவை உள்ளது. அதில் மிகவும் பிரபலமானது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி. இந்த பிரியாணியின் சிறப்பே சீரக சம்பா அரிசி தான். பிரியாணியை சீரக சம்பா அரிசியில் செய்தால் அதன் சுவையே அட்டகாசமாக இருக்கும். அப்படிப்பட்ட திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணியை இனி நம் வீட்டிலேயே செய்திடலாம். அதை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். வாருங்கள், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி செய்முறையை இப்போது பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

  • சீரக சம்பா அரிசி - 1 1/2 கப் - சுடுநீர் - 2 1/2-3 கப்
  • சிக்கன் - 500-600 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
  • இஞ்சி - 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • பூண்டு - 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 6
  • சின்ன வெங்காயம் - 20
  • பிரியாணி மசாலா பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் (இதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
  • நெய் + எண்ணெய் - 3 + 2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 1/3 கப்
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
  • சுடுநீர் - 1/4 கப்
  • புதினா மற்றும் கொத்தமல்லி - தலா 1/3 கப் (பொடியாக நறுக்கியது)
  • உப்பு - சுவைக்கேற்ப
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

பிரியாணி மசாலா பவுடர் அரைப்பதற்கு…

  • மல்லி - 2 டீஸ்பூன்
  • சோம்பு - 1/2 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • ஏலக்காய் - 5
  • கிராம்பு - 5
  • பட்டை - 1 1/2 இன்ச்
  • முந்திரி - 5
  • ஜாதிக்காய் - 1/8 டீஸ்பூன்
  • அன்னாசிப்பூ - 1
  • கல்பாசி - 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை - 2 சிறியது

செய்முறை:

  • முதலில் பிரியாணி மசாலா பொடி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி குறைவான தீயில் சூடேற்றவும்.
  • அதே வேளையில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைத்து, அத்துடன் சின்ன வெங்காத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது அரைத்த விழுதை எண்ணெய் சூடானதும் சேர்த்து 12-15 நிமிடம் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், அரைத்த பிரியாணி மசாலா பொடியை சேர்த்து வதக்கவும். மசாலா அடிப்பிடித்திடாமல் இருக்க, சிறிது நீர் தெளித்து கிளறி, குறைவான தீயில் ஒரு நிமிடத்திற்கு வேக விடவும்.
  • அதன் பிறகு அதில் கழுவி நன்கு சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு, அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் சிக்கனை வேக விடவும்.
  • சிக்கனின் நிறம் வெள்ளையாக மாறியதும் அதில் தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் சிக்கனை வேக விடவும்.
  • இப்போது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வேக விட்டு, பின்பு 1/4 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, 15 நிமிடம் மூடி வைத்து, அவ்வப்போது கிளறிவிட்டு, சிக்கனை வேக வைக்கவும்.
  • பின்னர் சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வாணலியில் உள்ள கிரேவி எவ்வளவு உள்ளது என்று அளந்து பார்த்துக் கொள்ளுங்கள். இது சுமார் 1/2 கப் வரை இருக்க வேண்டும்.
  • 1 1/2 கப் சீரக சம்பா அரிசிக்கு 3 கப் தண்ணீர் தேவை. எனவே, பாத்திரத்தில் உள்ள 1/2 கப் கிரேவியுடன் 2 1/2 கப் சுடுநீரை ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, 1-2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது உப்பு சுவை பார்த்து, தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.
  • பின்னர் சீரக சம்பா அரிசியை நன்கு நீரில் கழுவி மசாலாவுடன் சேர்த்து, அதோடு 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • இப்போது மூடியைத் திறந்து கிளறிவிட்டு மீண்டும் மூடி 6 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். அவ்வப்போது சாதத்தை கிளறி விடுங்கள்.
    *இதனால் சாதம் குலைந்துவிடாமல் இருக்கும். 6 நிமிடம் ஆனதும், அந்த வாணலியை அலுமினியத் தாள் கொண்டு சுற்றி, மூடியால் மூடி, அதன் மேல் ஒரு கனமான பொருளை வையுங்கள்.
  • அதே வேளையில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல் நன்கு சூடானதும், நெருப்பைக் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, குறைவான தீயில் 8-10 நிமிடம் வேக வைத்து, அடுப்பை அணைக்க வேண்டும்.
  • அடுப்பை அணைத்த பின்னர் 10-15 நிமிடம் கழித்து பிரியாணி பாத்திரத்தை திறந்து மெதுவாக கிளறி மூடி விட்டு, மீண்டும் 5-6 நிமிடம் கழித்து திறந்தால், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி தயார்.

Image Courtesy: yummyoyummy

4.5 Inch Adiyogi Statue with Rudraksh Mala/Resin Car Dashboard Idols/Lord Shiva for Pooja/Shivratri Gift/Decor/Shiv Murti/Mahadev Statues/Decorative Items for Home/Office(Black)
Recommended for You
4.5 Inch Adiyogi Statue with Rudraksh Mala/Resin Car Dashboard Idols/Lord Shiva for Pooja/Shivratri Gift/Decor/Shiv Murti/Mahadev Statues/Decorative Items for Home/Office(Black)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க