Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

சருமம் முதல் தலைமுடி வரை அனைத்து பிரச்சனைகளுக்குமான ஒற்றை தீர்வு "முந்திரி"!!!

A
Admin User
Journalist
May 04, 2022 1 min read 22 views
சருமம் முதல் தலைமுடி வரை அனைத்து பிரச்சனைகளுக்குமான ஒற்றை தீர்வு "முந்திரி"!!!

கோடைகாலத்தில், ஆரோக்கியத்துடன் வாழ தலைமுடி மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக்கொள் வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை நம் சருமம் மற்றும் கூந்தலுக்கும் அளிக்க வேண்டியது அவசியம். ஆனால், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்று வரும் போது அனைவருமே சந்தைகளில் விற்கப்படும் ரசாயனம் நிறைறந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சருமம், கூந்தல் எதுவாக இருந்தாலும், அதன் வெளிப்புற பராமரிப்பை விட உடலுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்க வேண்டியது அவசியம். அதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை. அதற்கு சிறந்தது முந்திரி. முந்திரி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமம் மற்றும் கூந்தலை பொலிவாக வைத்திருக்கவும் உதவக்கூடியது. முந்திரியில் புரதம், தாதுக்கள், இரும்பு, நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், ஆன்டி-ஆன்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சரி, முந்திரியின் ஆரோக்கிய நன்மைகள் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்வோம்…

சுருக்கங்களைக் குறைக்கும்

முந்திரி சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்திடும். உண்மையில், முந்திரியில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சருமத்தை பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. தினந்தோறும், முந்திரி பருப்பை உட்கொள்வதன் மூலம் முகத்தில் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகள் நீங்கி சருமம் இளமை பொலிவைப் பெறும்.

முதுமையைத் தடுக்கும்

இளமை பருவத்தை தக்க வைத்துக் கொள்ள, முதுமை நெருங்காமல் இருக்க முந்திரியை தாராளமாக பயன்படுத்தலாம். உண்மையில், முந்திரி பருப்பில் புரதம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் வயதாகும் அறிகுறியைக் குறைக்கவும், சருமத்தை பளபளப்பாக மாற்றவும் உதவுகின்றன.

எண்ணெய் பசையைப் போக்கும்

பெரும்பாலான மக்களுக்கு முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை இருக்கக்கூடும். இதன் காரணமாக, அவர்கள் முகத்தில் அழுக்குகள் சேர்ந்து முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளைச் சந்திக்க தொடங்குகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எண்ணெய் பசை மிக்க சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக முந்திரி பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முந்திரி சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையைப் போக்க உதவுகிறது.

கூந்தலைப் பொலிவாக்கும்

முந்திரி பருப்பில் மெக்னீசியம், ஜிங்க், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதே சமயம், முடி உதிர்தல் பிரச்சனையைக் குறைத்து மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. எனவே, கூந்தல் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி உணவில் முந்திரியை சேர்ப்பது நன்மை பயக்கும்.

Memory Foam Car Seat Back Support, Orthopedic Lumbar Back Rest for Back Pain Relief, Back Support Pillow for Office ChairCarBack Support Pillow
Recommended for You
Memory Foam Car Seat Back Support, Orthopedic Lumbar Back Rest for Back Pain Relief, Back Support Pillow for Office ChairCarBack Support Pillow

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க