Sunday, June 28, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

கோடை வெயிலை சமாளிக்க இந்த மெலன் சாலட் ட்ரை பண்ணுங்க…

A
Admin User
Journalist
May 08, 2023 3 min read 185 views
கோடை வெயிலை சமாளிக்க இந்த மெலன் சாலட் ட்ரை பண்ணுங்க…

Chilled Melon Ball Salad: எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் தாக்கம் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. இத்தகைய சூழலில், உடலில் உஷ்ணத்தைக் குறைக்க கோடைகால பழங்கள், நீர் காய்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள் வேண்டாம் என உங்கள் குழந்கைகள் சொல்கிறார்களா? அப்படியெனில், உங்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கோடைகால பழங்களான தர்பூசணி, முலாம்பழம் வைத்து அசத்தலான சாலட் செய்யலாம். வாருங்கள் இப்போது அதற்கான செய்முறை மற்றும் தேவையான பொருட்களைத் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • தர்பூசணி - 1/4 கப்
  • முலாம்பழம் - 1 கப்
  • உப்பு - சுவைகேற்ப
  • கருப்பு மிளகு தூள் - சிறிதளவு
  • எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன்

சாலட் டிரஸ்ஸிங் செய்ய

  • ப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸ் - 2 டீஸ்பூன்
  • நறுக்கிய புதிய புதினா இலைகள் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • தர்பூசணி பழத்தை சிறிய உருண்டைகளை ஸ்கூப் செய்து எடுத்து, விதைகளை நீக்கி வைத்து கொள்ளவும். இதேபோல், முலாம்பழத்தையும் சிறு உருண்டைகளாக எடுத்து, இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  • பின்னர் டிரஸ்ஸிங் செய்ய, ஒரு சிறிய கிண்ணத்தில் ஆரஞ்சு சாறு, உப்பு, கருப்பு மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் புதினா இலைகளை சேர்க்கவும்.
  • அப்போது, குளிர்ந்த தர்பூசணி மற்றும் முலாம்பழ உருண்டைகளை எடுத்து, அதன் மீது தயார் செய்த சாலட் டிரஸ்ஸிங்கை ஊற்றி உடனடியாக பரிமாறவும். இந்த கோடை சூட்டைத் தணிக்க இது தேவாமிர்தமாக நிச்சயமாக இருக்கும்.
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,370
தங்கம் (24k)
1 கிராம்
₹14,039
வெள்ளி
1 கிராம்
₹245
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க