Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

அல்சர் பிரச்சனையை விரைவில் குணமாக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!!!

A
Admin User
Journalist
December 15, 2021 1 min read 26 views
அல்சர் பிரச்சனையை விரைவில் குணமாக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!!!

அல்சர் எனும் வயிற்றுப்புண்கள் கடும் வலியை ஏற்படுத்தக்கூடியவை. வயிற்றில் உருவாகும் புண்கள் பெப்டிக் அல்சர் என்றும், சிறுகுடலில் உருவாகும் புண்கள் டியோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படுகிறது. வயிற்றிற்கு மேலே உள்ள சளியின் அடர்த்தியான லேயர் குறைவது தான் வயிற்றில் புண் ஏற்படுவதற்கு காரணம். ஏற்கனவே சளி லேயர் மெல்லியதாக இருப்பதால், சரியான நேரத்தில் உணவை உண்ணாமல் இருக்கும் போது செரிமான அமிலங்கள் வயிற்றுத் திசுக்களை உண்ண ஆரம்பித்து, அல்சரை உண்டாக்குகின்றன. அல்சர் இருக்கும் போது, அதற்கான மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர, ஒரு குறிப்பிட்ட பழங்களை சாப்பிடுவது அல்சரை விரைவில் குணப்படுத்தும். அவற்றைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. குறிப்பாக ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். எனவே, அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.

மாதுளை

வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை செரிமான பிரச்சனைகளால் மட்டுமே ஏற்படுகிறது. மாதுளையின் தோல் வயிற்றுப் பிரச்சனைகளுக்கான சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மாதுளை ஜூஸை குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னர் ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.

சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்.

பலாப்பழம்

பலாப்பழத்தில் உள்ள அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகள சரிசெய்யவும் உதவும். மேலும், பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பைல்ஸ் பிரச்சனைக்கு நிவாரணம் அளிப்பதோடு, மலச்சிக்கலையும் தடுக்கிறது. அதோடு, இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், கல்லீரல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

முலாம் பழம்

முலாம் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளதோடு, இதில் உள்ள நீர்ச்சத்து குடல் பிரச்சனைகளை சரிசெய்து அல்சரையும் குணப்படுத்த உதவும். மேலும், முலாம் பழம் உடலின் pH அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் 90% நீர் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளதால், இது நெஞ்செரிச்சல் பிரச்சனைகளையும் தடுக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி வயிற்றுப் புண்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கும். இது தவிர, இது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவும். எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாவதோடு, அல்சர் பிரச்சனையும் விரைவில் குணமடையும்.

https://www.youtube.com/watch?v=ag3TRB2jElc
VESCO Kick Pro 16T Kids Cycle with Side Wheels | Rigid Suspension | 11 Inches Frame | Ideal for 4 to 6 Years Boys & Girls Kids Bike (Orange)
Recommended for You
VESCO Kick Pro 16T Kids Cycle with Side Wheels | Rigid Suspension | 11 Inches Frame | Ideal for 4 to 6 Years Boys & Girls Kids Bike (Orange)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க