ஆஸ்துமா ஒரு வகை சுவாச நோய். ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களில், 5 வயதிற்கு மேற்பட்டவர்களது எண்ணிக்கை 2.05% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும், 3 முதல் 38% குழந்தைகளையும், 2 முதல் 12% பெரியவர்களையும் பாதிக்கிறது. சிறந்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆஸ்துமாவின் அறிகுறிகளை குறைத்திட உதவக்கூடும். மேலும், சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி அறிகுறிகளை அதிரிக்க செய்துவிடும். எனவே, ஆஸ்துமா உள்ளவர்கள் உண்ணும் உணவில் தனி அக்கறை செலுத்தியே ஆக வேண்டும். அவர்களுக்கு உதவும் வகையில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய சில உணவுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை
*ஆப்பிள்
*வைட்டமின் சி மற்றும் ஈ, பீட்டா கரோட்டின் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்
*ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன்கள், ஆளிவிதை, நட்ஸ்
*வாழைப்பழங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்
*வைட்டமின் டி நிறைந்த உணவுகள் (பால், ஆரஞ்சு ஜூஸ், சால்மன் மீன், முட்டை போன்றவை)
*மெக்னீசியம் நிறைந்த உணவுகள் (டார்க் சாக்லேட், பூசணி விதைகள், சால்மன் மீன், கீரை போன்றவை)
*வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் (கேரட், ப்ராகோலி, சக்கரவள்ளி கிழங்கு, பச்சை காய்கறிகள், கீரைகள் போன்றவை)
தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்
*சாலிசிலேட்டுகள் உள்ள உணவுகளை தவிர்த்தே ஆக வேண்டும். இவை மருந்துகள், காஃபி, தேநீர், மூலிகைகள் மற்றும பிற மசாலாக்களில் காணப்படுகின்றன.
*சல்பைட்டுகளை தவிர்க்க வேண்டும். இவை உலர்ந்த பழங்கள், ஒயின், ஊறுகாய், பாட்டிலில் அடைக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றில் உணவுகளை கெடாமல் காக்க பயன்படுத்தப்படும். இவை ஆய்துமாவை மோசமாக்கக்கூடும்.
*செயற்கையூட்டிகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், அவற்றில் உணவில் சுவைக்காகவும், நிறத்திற்காகவும், ரசாயனங்கள் சேர்க்கப்படக்கூடும். எனவே, அவற்றை ஒதுக்கி விடுங்கள்.
*முட்டைகோஸ், பீன்ஸ், கார்பனேற்றப்பட்ட பானங்கள், வெங்காயம் மற்றும் வறுத்த உணவுகள் போன்றவை வாயுவை உண்டாக்கக்கூடும். அதன் மூலம் மார்பு மற்றும வயிற்றிற்கு இடை பகுதியில் ஒரு வித அழுத்தம் உண்டாகும். எனவே அது போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள்.