Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

ஹோலி கொண்டாடும் முன்பு இந்த எண்ணெயை உங்கள் தலைமுடியில் தடவி கொள்ளுங்கள்...

A
Admin User
Journalist
March 01, 2022 1 min read 22 views
ஹோலி கொண்டாடும் முன்பு இந்த எண்ணெயை உங்கள் தலைமுடியில் தடவி கொள்ளுங்கள்...

ஹோலி பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, வண்ணங்களுடன் கொண்டாடப்படுகிறது. பல்வேறு விதமாக வண்ண பொடிகள், வண்ண வண்ண நீர்கள் ஊற்றி ஒருவர் மீது ஒருவர் உடல் முழுவதும் ஊற்றி மக்கள் ஹோலி பண்டிகையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். ஆனால் இந்த வண்ண நிறங்கள் உங்களது சருமம் மற்றும் முடிக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். முடியைப் பற்றி பேசினால், இரசாயன நிறங்கள் காரணமாக, முடி சேதமடைகிறது. அதிலும், நீண்ட காலத்திற்கு அவற்றை சரிசெய்வது என்பது எளிதானது அல்ல. இதுபோன்ற சூழ்நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாடவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறோம். அதைப் பின்பற்றினால் உங்கள் கூந்தலை இரசாயன பொடிகளால் ஏற்படக்கூடிய சேதத்தில் இருந்து தடுத்திடலாம். அதற்கு, உங்கள் கூந்தலுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களில் ஒன்றை பயன்படுத்தினால் இந்த ஹோலி பண்டிகையை எந்த வித கவலையும் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.

கடுகு எண்ணெய்

ஹோலி பண்டிகை அன்று வண்ண பொடிகளை பூசி விளையாடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கடுகு எண்ணெயை தலைமுடியில் தடவிடவும். அவ்வாறு செய்வதன் மூலம், முடியில் விழும் இராசயன வண்ணப்பொடிகள் கூந்தலுக்கு தீங்கு விளைவிக்காது. கூந்தலில் உள்ள எண்ணெய், மேற்கொண்டு கூந்தலுக்குள் வண்ண பொடிகளை உள்நுழைய அனுமதிக்காது. ஹோலி கொண்டாட்டத்திற்கு பின்னர் கூந்தலை ஷாம்பு போட்டு அலசினால் நிறம் எளிதாக போய்விடும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் முடியை ஆரோக்கியமாகவும், அதன் வளர்ச்சியை மேம்படுத்தவும், பளபளப்பாக வைத்து கொள்ளவும் உதவுகிறது. உண்மையில், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியை வேகமாக வளர செய்யும். அதுமட்டுமின்றி, ஹோலி பண்டிகையின் போது பயன்படுத்தப்படும் ரசாயன பொடிகளில் இருந்தும் உங்கள் கூந்தலை தேங்காய் எண்ணெய் காத்திடும். அதற்கு, கொண்டாட்டத்திற்கு முன்பு கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்

ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் ரசாயன வண்ண பொடிகள் அவ்வளவு சுலபமாக போய்விடாது. அதனால், உங்கள் சருமம், கூந்தலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, அவை ஏற்படலாம் தடுக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது. வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகையை விளையாடுவதற்கு முன்பு, எலுமிச்சைச் சாற்றை, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து ஹேர் மாஸ்க் செய்து, முடிக்கு தடவி கொள்ளுங்கள். வண்ண சாயங்கள் விரைவில் மறைந்துவிடுவதோடு, அவற்றால் கூந்தலுக்கு எந்த சேதமும் ஏற்படாது.

Boat 2025 Launch Rockerz Trinity Grande, 150H Battery, Hi Res Audio by LDAC, Dual Pair, ENx Tech, Stream Ad Free Music via App Support, Bluetooth Neckband, Wireless with Mic Earphones
Recommended for You
Boat 2025 Launch Rockerz Trinity Grande, 150H Battery, Hi Res Audio by LDAC, Dual Pair, ENx Tech, Stream Ad Free Music via App Support, Bluetooth Neckband, Wireless with Mic Earphones

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க