Friday, August 07, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அபூர்வ யோகத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்!!!

A
Admin User
Journalist
April 05, 2022 4 min read 161 views
30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அபூர்வ யோகத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்!!!

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுவது வழக்கம். கிரகங்களின் இத்தகைய ராசி மாற்றத்தால் ஒன்று அல்லது பல யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகம் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும், சிலருக்கோ சிரமங்களைக் கொடுக்கும். அந்தவகையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி, சூரியன், சனி பகவானின் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அபூர்வ யோகம் உருவாக போகிறது. தற்போது சூரியன் கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். மறுபுறம், சனி பகவான் தனது சொந்த ராசியான மகர ராசியில் அமர்ந்திருக்கிறார். இரண்டு கிரகங்களின் இந்த நிலை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை வாரி வழங்க போகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்…

மேஷம்

சனி மற்றும் சூரிய சஞ்சாரத்தால் உருவாகும் இந்த சுப சேர்க்கை உங்களுக்கு எதிர்பார்க்காத பல நல்ல பலன்களை அள்ளி தர போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு, தங்கள் தொழிலில் பெரிய பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும். அதுதவிர, வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தொடங்குதற்கான சூழலும் உருவாகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு, ஊதிய உயர்வுடன் கூடிய புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது தற்போதைய அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். இதனால், அலுவலகத்தில் உங்கள் கௌரவம் உயரும். உங்கள் செயல்திறனால் மேலதிகாரியின் பாராட்டைப் பெறலாம். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிதி சிக்கல்கள் அனைத்தும் நீங்கி, சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம்.

சிம்மம்

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு சுபமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கொண்டிருந்த வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு, தொழிலில் எதிர்பாராத லாபத்திற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு இந்த காலம் மிகவும் சாதகமான காலம். இதுதவிர, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். புது வீடு கட்டுவதற்கோ அல்லது கட்டிய வீட்டை வாங்குவதற்கோ வாய்ப்புண்டு. திடீர் பண வரவால் உங்கள் நிதி நிலை மேலோங்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,750
தங்கம் (24k)
1 கிராம்
₹14,438
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க